மனைவியின் குழந்தையை கருவில் சுமக்கும் கணவன்..! ஒரு விசித்திரமான சம்பவம்! எப்படி தெரியுமா?

மனைவியின் குழந்தையை தனது கருவில் சுமக்கும் கணவனின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.


மனைவியான டானா சுல்தானா என்றவர் பிறக்கும்போது ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர். அதேபோல கணவனான எஸ்டிபன் லாண்ட்ரா என்பவர் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். இவர்கள் இருவரும் இதுவரை அறுவை சிகிச்சை செய்து கொண்டு தங்களது இனப்பெருக்க உறுப்புகளை அகற்றி கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்த இந்த ஜோடி இயற்கையாகவே கருவுற்று இருக்கிறார்கள். 

தற்போது 8 மாதம் கர்ப்பமாக இருக்கும் கணவர் எஸ்டிபன் லாண்ட்ரா என்பவர் திடீரென இடுப்பு வலி வந்ததால் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் எட்டு மாதங்களில் வலி வருவது சகஜம். இது பிரசவ வலி இல்லை என்று சொல்லி அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டார்களாம். 

8 மாதம் கர்ப்பமாக உள்ள தனது கணவரின் வயிற்றை மனைவி முத்தமிடும் வித்தியாசமான புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.