திருமணத்திற்கு பிறகு தினம் தினம்..! கர்ப்பமான காதல் மனைவி..! கடப்பாறையை எடுத்து ஓங்கி ஒரு அடி..! கணவன் வெறியாட்டம்! அதிர்ச்சி தகவல்!

மது போதையில் இருந்த கணவர் கர்ப்பமான மனைவியை கடப்பாரையால் அடித்து கொலை செய்துள்ள சம்பவமானது காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிழம்பி புதூர் என்று இடம் அமைந்துள்ளது. இங்கு ஹரி என்ற 25 வயது இளைஞர் வசித்து வருகிறார். இவர் தேவி என்ற 21 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதலுக்கு தேவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி 7 மாதங்களுக்கு முன்னர் தேவி காவல் நிலையத்தில் ஹரியை திருமணம் செய்துகொண்டார். 

காதலித்து வந்த நேரத்திலேயே ஹரி மதுபோதைக்கு அடிமையான என்பது தேவிக்கு தெரியாது. திருமணமான நாட்களிலிருந்தே ஹரி வீட்டிற்கு தினமும் மது அருந்திவிட்டு வருவதை வழக்கமாக கொண்டார். இதனால் அவ்வப்போது கணவன் மனைவியிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டன. இதனிடையே தேவி 4 மாத கர்ப்பிணியானார். 

சம்பவத்தன்று வழக்கம் போல மது அருந்திவிட்டு வந்த ஹரி தேவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியது அருகே இருந்த இரும்பு கம்பியால் ஹரி தேவியை தாக்கியுள்ளார். சம்பவ இடத்திலேயே தேவி உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் தேவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் ஹரியை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.