என் கணவன் வாயில் இருந்து ரத்தம் வழிந்தது..! கொரோனா தான் கொன்றுவிட்டது..! மனைவி கூறிய திடுக் தகவல்! ஆனால் உண்மை?

கணவரை அடித்து கொலை செய்த மனைவி, அவர் கொரோனா வைரஸால் உயிரிழந்தார் என்று பொய் கூறியது பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவை சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவருடைய வயது 48. கட்டிட வேலை செய்து வந்த இவர், வேலை நிமித்தமாக புதுச்சேரியில் தங்கியிருந்தார். இவருக்கு 39 வயதான சத்யா என்ற மனைவியுள்ளார். இத்தம்பதியினருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

கட்டிட வேலை செய்து வருவதால் மஞ்சுநாதனுக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மஞ்சுநாதனுக்கு மது கிடைக்கவில்லை. இதனால் அவர் பைத்தியம் பிடித்தது போன்று, வீட்டு செயல்பட்டுள்ளார். இவருடைய தொல்லை தாங்காமல் உறவினர்கள் இவரை கட்டிப்போட்டனர்.

இருப்பினும் கடந்த சில நாட்களாக பேய் வந்தது போன்று நடித்து அனைவரையும் தொல்லை செய்து வந்தார். இதனிடையே நேற்று காலை 11 மணி அளவில் ரத்த காயங்களுடன் மஞ்சுநாதன் உயிருக்கு போராடிய நிலையில் வீட்டிலிருந்துள்ளார். உடனடியாக சத்தியா அக்கம்பக்கத்தினரிடம் தன்னுடைய கணவரை கொரோனா வைரஸ் தாக்கியதால் ரத்த வாந்தி எடுத்து உயிருக்கு போராடி வருவதாக கூறியுள்ளார்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மஞ்சுநாதன் அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் மருத்துவர்கள் மஞ்சுநாதன் கொலைசெய்யப்பட்டிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர். 

காவல்துறையினர் மீண்டும் மஞ்சுநாதனின் வீட்டிற்கு சென்று சத்யாவிடம் விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையை தாக்கு பிடிக்க இயலாத சத்யா, தன்னுடைய கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மஞ்சுநாதன் கடந்த 2 வாரங்களாக மது அருந்தாமல் இருந்ததாகவும், அதனால் வீட்டிலிருந்த அனைவரையும் தாக்கி வந்ததாக சத்யா கூறினார். அவருடைய தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், அவரை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்ததாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சத்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.