கொரோனாவால் உயிருக்கு போராடிய கணவன்! கடைசியாக பார்த்துவிட ஓடோடிச் சென்ற மனைவி! அங்கு அவருக்கு மொபைலில் இருந்த செய்தி..! மனதை உலுக்கும் சம்பவம்!

கொரோனா தாக்குதலில் பாதிக்கப்பட்டிருந்த கணவனை மனைவியால் உயிருடன் காண இயலாத சம்பவமானது அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்கா நாட்டில் கனெக்டிகட் என்ற இடம் அமைந்துள்ளது. இவருடைய பெயர் ஜான் கோயெலோ. இவரின் வயது 32. இவருடைய மனைவியின் பெயர் கேட்டி. கேட்டியின் வயது 33. இத்தம்பதியினருக்கு பிராண்டி என்ற மகனும், பெனலோப் என்ற மகளும் உள்ளனர். 

இந்நிலையில் அமெரிக்காவில் படு வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால் இவர்களுடைய குடும்பத்தினரும் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். ஜான் மற்றும் அவருடைய மகன் பிராண்டி, இந்த வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இருவரையும் மாறி மாறி கேட்டி கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜானின் உடல்நிலை மிகவும் மோசமானதாக கேட்டிக்கு தகவல் கிடைத்துள்ளது. கணவரின் கடைசி காலத்தை அவருடன் செலவிட வேண்டும் என்று வேகவேகமாக சென்ற கேட்டிக்கு சோகமே மிஞ்சியது. அவர் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே ஜான் இறந்துவிட்டார்.

தான் இறப்பதற்கு முன்பாக ஜான் ஒரு செய்தியை தன்னுடைய குடும்பத்தினரிடம் பகிர்ந்திருந்தார். அதில், "உன்னை போன்ற ஒரு அருமையான பெண்ணை நான் இதுவரை கண்டதில்லை. என்னுடைய வாழ்வில் நடந்த நன்மையான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. உன்னையும் நம்முடைய குழந்தைகளையும் யாரேனும் என்னைப் போன்று நேசித்தால் அவர்களுடன் இணைந்து வாழுங்கள்.

என் மகனிடம் கூறு, அவன் தான் என்னுடைய சிறந்த நண்பன் என்று. அவனைப் பெற்றெடுத்த இதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். 

என்னுடைய மகளிடம் கூறு, அவள் ஒரு இளவரசி என்று. அவளுக்கு வேண்டிய அனைத்தும் நிச்சயமாக வாழ்வில் கிடைக்கும். உங்களின் உறவுகளை பெற்றதே இந்த வாழ்வில் நான் மிகவும் சிறந்ததாக கருதுகிறேன்" என்று கூறியிருந்தார்.

இந்த பதிவை படித்தவுடன் கேட்டி கதறி அழத்தொடங்கினார். இந்த சம்பவமானது அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.