கர்ப்பமாக இருந்த மனைவியை மகிழ்விக்க கணவர் அனுப்பிய புகைப்படமானது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
கர்ப்பிணி மனைவிக்கு பிரசவத்தில் சிக்கல்! கணவனுக்கு திடீரென வீங்கிய வயிறு! நெகிழ வைக்கும் காரணம்!

அமெரிக்கா நாட்டில் ஜாரேட் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் கெல்சி. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கெல்சி கருவுற்றார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது அவருக்கு குழந்தை பிறப்பதில் சிக்கலிருப்பதாக தெரிவித்தனர். ஆகையால் குழந்தை நலமாக பிறப்பதற்காக படுத்த படுக்கையாக இருக்குமாறு கெல்சிக்கு அறிவுறுத்தினர்.
இதனால் புகைப்படம் எடுக்க இயலாததால் கெல்சி மிகவும் வருத்தப்பட்டார். அவருடைய வருத்தத்தை போக்குவதற்கு ஜாரேட் எண்ணிக்கொண்டிருந்தார். அந்நாட்டிலுள்ள புகழ்பெற்ற புகைப்பட கலைஞரான கே.எம்.ஸிமித்தர் என்பவரை கலந்தாலோசித்தார்.
ஜாரேட்டுக்கு தொப்பை இருந்துள்ளது. அதனை பல்வேறு விதமாக ஸ்மித்தர் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை ஜாரேட் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
புகைப்படங்களுக்கு பலரும் இன்பமாக கமெண்ட் அடித்துள்ளனர். மேலும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.