மனைவியின் நிராகரிப்பை தாங்கிக்கொள்ள இயலாத கணவர் தன் பிறப்புறுப்பை துண்டித்து கொண்ட சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராத்திரி நேர அட்டகாசம்! தேவி எடுத்த முடிவு..! அதிர்ச்சியில் தனது அந்தரங்க உறுப்பை கட் செய்த கணவன்! பகீர் காரணம்!

சென்னை வண்ணாரப்பேட்டையில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 35. இவருடைய மனைவியின் பெயர் தேவி. இவர்களுக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் இத்தம்பதியருக்கு குழந்தை பிறக்கவில்லை.
பாபுவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் தேவிக்கு அவர் மீது வெறுப்பு தொடர்ந்து ஏற்பட்டு வந்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள இயலாத காரணத்தினால் தேவி பாபுவை விவாகரத்து செய்வதற்கு முடிவெடுத்தார். சில வாரங்களுக்கு முன்னர் தேவி தன்னுடைய தாயாரின் வீட்டுக்கு பாபு மீது கோபித்து கொண்டு சென்றுவிட்டார்.
இதனால் பாபு தனிமையில் வாழ்ந்து வந்தார். இதனிடையே புத்தாண்டு நெருங்க நெருங்க தேவியின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியுள்ளது. டிசம்பர் மாதம் 31-ஆம் தேதியன்று கணவருடன் மீண்டும் இணைந்து வாழவேண்டும் என்று தேவி முடிவெடுத்துள்ளார்.
அதன்படி புத்தாண்டு அன்று தேவி வண்ணாரப்பேட்டை வந்துள்ளார். அப்போதும் பாபு முழுவதுமாக மது அருந்திவிட்டு வீட்டில் முழு போதையில் இருந்துள்ளார். இதனால் தேவை மீண்டும் கடுப்பாகியுள்ளார். நிச்சயமாக விவாகரத்து செய்து விடுவதாக கூறி, தன்னுடைய தாயின் வீட்டிற்கு செல்வதற்கு புறப்பட்டுள்ளார்.
இந்த சம்பவமானது பாபுவை பெரிய அளவில் பாதித்துள்ளது. உடனடியாக சமையலறைக்கு சென்று கத்தியை எடுத்து தன்னுடைய பிறப்புறுப்பை அறுத்து கொண்டுள்ளார். வலியால் பெரிதளவில் துடித்து கொண்டிருந்த பாபுவின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
தற்போது அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவமானது வண்ணாரப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.