15வயசு மூத்தவங்க! அக்கானு சொன்னான்! ஆனால் கட்டிலில் இருக்காங்க! திமுக நகரச் செயலாளர் பகீர் செயல்!

15 வயது அதிகமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக திமுக நிர்வாகியின் மனைவி புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையிலுள்ள அடையாறு பகுதியை சேர்ந்தவர் ரம்யா. இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் வாணியம்பாடியை சேர்ந்த திமுக நிர்வாகியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அவருடைய பெயர் சாரதிக்குமார். திருமணத்திற்கு முன்னர் அவர் சேலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் பணியாற்றி வந்தார். 

அப்போது அவரைவிட 15 வயது முதியவரான ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். காதலுக்கு இடையிலேயே சாரதிக்குமார் ரம்யாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் செய்து கொண்ட பின்னரும் அந்த பெண்ணுடனான தொடர்பை சாரதிக்குமார் தொடர்ந்துள்ளார்.

இதனிடையே ரம்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, மகப்பேறுக்காக அவருடைய வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது தன் கள்ளக்காதலியை சாரதிக்குமார் வீட்டிற்கு அழைத்துவந்து கூத்தடித்துள்ளார். இதனை தெரிந்துகொண்டவுடன், ரம்யா திமுக தலைவர் ஸ்டாலினிடம் புகார் மனுவை சமர்ப்பித்துள்ளார். 

இது தெரிந்தவுடன் சாரதி குமார் ரம்யாவை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். அதுமட்டுமின்றி இருவரும் விவாகரத்துக்கு முடிவெடுத்தனர். மேலும், ரம்யாவின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு சாரதிக்குமார் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனிடையே அவரிடம் பயந்துகொண்டு ரம்யா அடையாறில் உள்ள தன்னுடைய உறவினரின் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். தற்போது அவர் அப்பகுதி காவல் நிலையத்தில் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்று புகார் அளித்துள்ளார். மேலும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சாரதிக்குமார் பதிலளிக்கையில், விவாகரத்து வழக்கு முடிவடையும் தருவாயில் இருப்பதால், பணத்தை என்னிடமிருந்து பெறுவதற்காக இத்தகைய நாடகமாடுகிறார் என்று சாரதிக்குமார் கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.