மனைவியுடன் உல்லாசம்..! விதவிதமாக வீடியோ எடுத்து ரசித்த விபரீத என்ஜினியர் கணவன்! செல்போனை பார்த்து அதிர்ந்த குடும்பம்!

திருக்கோவிலூர் அருகே மனைவியுடன் உல்லாசமாக இருந்ததை கணவரே விதவிதமாக வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருக்கோவிலூரில் வசித்துவரும் கார்த்திக்(வயது 38) என்ற இன்ஜினியருக்கும் புதுவை பாரதிநகர் பகுதியை சேர்ந்த 25 வயது பட்டதாரி பெண்ணுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக சீர் வரிசையாக சுமார் ரூபாய். 50 லட்சம் பணம் மற்றும் நகை பொருட்கள் போன்றவை பெண் வீட்டார் சார்பில் மாப்பிள்ளை குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. 

திருமணம் முடிந்து சில நாட்களில் கார்த்திக்கு சென்னையில் வேலை கிடைத்து உள்ளது. சென்னைக்கு வேலை கிடைத்தத விவரத்தை அவரது மனைவியிடம் கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட அவரது மனைவி நாம் இருவரும் சேர்ந்து சென்னைக்கு குடி பெயர்ந்து விடலாம் என்று யோசனை அளித்துள்ளார். உடனே கார்த்திக் நீ உன் அம்மாவிடம் சென்று இரண்டு லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு வா என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து கார்த்திக்கின் மனைவி அவரது பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி கொண்டு வந்து கணவரிடம் கொடுத்துள்ளார் . பின்னர் இருவரும் இணைந்து சென்னையில் வீடு ஒன்றை எடுத்து தங்கி வாழ்ந்து வந்திருக்கின்றனர். 

பின்னர் கார்த்திக் தன் செல்போனில் ஆபாச வீடியோக்களை தன் மனைவியிடம் காட்டி இருக்கிறார் . அந்த வீடியோவில் இருப்பதை போல் தன்னிடம் நடந்து கொள்ள வேண்டும் எனவும் தன் மனைவியை மிரட்டி இருக்கிறார். ஒருவேளை அப்படி நடந்து கொள்ளவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் எனவும் மனைவியை மிரட்டி உள்ளார். அவரது மனைவியும் கொலை மிரட்டலுக்கு பயந்து கார்த்திக் கூறியதுபோல் நடந்து கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் கார்த்திக் தன் மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை தானே தன் செல்போனில் வீடியோ பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ பதிவானது கார்த்திக்கின் மனைவியின் கண்ணில் சிக்கியுள்ளது . இதனை பார்த்த அவரது மனைவி மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அவர் தன் பெற்றோருக்கு போன் செய்து கதறி அழுதிருக்கிறார் .இதனை கேட்ட அவரது பெற்றோர் உடனடியாக சென்னைக்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து கார்த்திக்கின் பெற்றோரிடத்தில் தன் மகள் கூறிய எல்லாவற்றையும் கூறி நியாயம் கேட்டிருக்கின்றனர். இதனைக்கேட்ட கார்த்திக்கின் பெற்றோர் எங்களுக்கு நீங்கள் அளித்த வரதட்சனை போதாது மேலும் நீங்கள் ரூபாய் . ஐந்து லட்சத்தை வரதட்சணையாக அளிக்க வேண்டும் எனவும் கட்டளை வைத்துள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் தங்களுடைய மகளின் நாங்கள் எங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறியிருக்கின்றனர். அதனை அடுத்து அந்தப் பெண் அவரது பெற்றோருடன் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார். 

நடந்த சம்பவம் அனைத்தையும் திருக்கோவிலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் அந்தப் பெண். புகாரை பெற்றுக் கொண்ட திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் இந்த வழக்கை பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். கார்த்திக், அவரது தந்தை கோவிந்த ராஜ்,தாய் மல்லிகா,சகோதரி ஸ்ரீபிரியா ஆகிய நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.