எனக்கு பிரியாணி வேணும்! மறுத்த மனைவியை உயிரோடு எரித்த கணவன்! பதைபதைக்க வைத்த சம்பவம்!

பிரியாணி செய்து தராததால் மனைவியை கணவர் எரித்துக்கொலை செய்த சம்பவமானது திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள கொத்தங்குடி என்னும் இடத்தை சேர்ந்தவர் சித்திரைவேல். இவருடைய வயது 41. இவருடைய மனைவியின் பெயர் கற்பகம். கற்பகத்தின் வயது 32. இவ்விருவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தம்பதியினருக்கு மதுசூதனன் என்ற 8 வயது மகனுள்ளான். 

சித்திரைவேலுக்கு தினமும் மது அருந்தும் பழக்கமுள்ளது. தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார்.இவருடைய தங்கைக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் மிக அருகில் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சித்திரவேலின் தங்கை வீட்டில் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தார். இதைப்பார்த்த சித்திரைவேல் வீட்டிற்கு வந்து கற்பகத்திடம், தங்கையின் வீட்டிலிருந்து பிரியாணியை எடுத்து வருமாறு கூறியுள்ளார். இதற்கு கற்பகம் மறுப்பு தெரிவித்துள்ளார். உடனடியாக சித்திரவேல் தனக்கு பிரியாணியை சமைத்து தருமாறு கூறியுள்ளார். அப்போது கற்பகம் பிரியாணி சமைப்பதற்கான பொருட்கள் இல்லாததால் சமைக்க இயலாது என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சித்திரவேல், மனைவியை கீழே தள்ளிவிட்டு மண்ணெண்ணையை ஊற்றி அவரை தீவைத்து எரித்துள்ளார். வெப்பம் தாங்காமல் கற்பகம் அலறத்தொடங்கியதை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மனைவியை கொல்ல முயன்ற குற்றத்திற்காக சித்திரைவேலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது கூத்தாநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.