கள்ளக்காதலியுடன் நிரந்தரமாக வாழ நினைத்த கணவனை மனைவியும், மகளும் பெட்ரோல் ஊற்றி எரித்த அதிர்ச்சி சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
நான் இருக்கும் போது உனக்கு சித்தாள் சரோஜா கேட்குதா? கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி! நாமக்கல் திகுதிகு!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் கட்டிட மேஸ்திரி கந்தசாமி, அங்கம்மாள் தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு சாந்தி என்ற மகள் இருக்கிறார்.
2 நாட்களுக்கு முன்னர் கந்தசாமி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென அய்யோ அம்மா என அலறித்துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது உடம்பெல்லாம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தார். உடனை அவருக்கு முதலுதவி அளித்த அக்கம் பககத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவத்தன்று கந்தசாமியின் மனைவி மற்றும் மகள் வீட்டில் இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அன்று அவர்கள் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினர் கூறினர். இது குறித்து கந்தசாமியின் மனைவி அங்கம்மாள், மகள் சாந்தியிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. கந்தசாமிக்கு தன்னுடன் பணிபுரியும் சரோஜா என்ற பெண்ணுக்கும் முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது. சரோஜா சேலத்தை சேர்ந்தவர். இவர்களின் கள்ளக்காதலை தெரிந்து கொண்ட அங்கம்மாள் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் கேட்கவில்லை.
ஒரு கட்டத்தில் சரோஜாவிடம் மட்டுமே வாழப்போவதாகவும் சொத்தை பிரித்துக் கொடுக்கும்படியும் கேட்டுள்ளார் கந்தசாமி. இதனால் ஆத்திரம் அடைந்த அங்கம்மாள் மற்றும் மகள் சாந்தி மற்றும் அங்கம்மாளின் தாயார் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினர். பின்னர் தூங்கிக் கொண்டிருந்த கந்தசாமி மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்துள்ளனர். தகவலை வாக்குமூலமாக வாங்கிக்கொண்ட போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.