விவாகரத்துக்கு மனைவி வைத்த ஒரே ஒரு நிபந்தனை! - வாழ்க்கை வாழ்வதற்கே... நெஞ்சை உருக்கும் அபூர்வ சம்பவம்

மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று எண்ணிய கணவனிடம் மனைவி வைத்த கோரிக்கையானது அனைவரையும் அதிர வைத்துள்ளது.


கணவன் மனைவிக்கு இடையே புரிதல் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் குறும்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த குறும்படத்தை கணவன்-மனைவி வாழ்ந்து வருகின்றனர். காலம் செல்லச் செல்ல அவர்கள் சின்ன சின்ன மனக்கசப்புகள் ஏற்படுகின்றன.

அப்போது கணவர் வேறு ஒரு பெண்ணின் மீது மோகம் கொள்கிறார். இதனால் தன் மனைவியிடம் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்துக்கு செல்கிறார். நீதிமன்றத்தில் மனைவி ஒரு கோரிக்கையின் அடிப்படையில் விவாகரத்து தர முன்வருகிறார். அதாவது திருமணமான புதிதில் தன் மீது எவ்வளவு அக்கறை கொண்டிருந்தாரோ அதே அளவு அக்கறையை 1 மாதத்திற்கு காட்டவேண்டும் என்பதாகும்.

கணவரும் இதற்கு சம்மதம் தெரிவித்து மனைவி மீது மிகவும் பாசமாக 1 மாத காலம் இருக்க திட்டமிட்டார். மிகவும் பாசமாக இருக்க தொடங்கியதிலிருந்தே அவருடைய மனைவியின் மீது அவருக்கு அபிப்ராயம் மாறுகிறது. விவாகரத்து செய்ய நினைத்தது தவறான முடிவு என்பதை உணர்கிறார். 1 மாத காலம் முடியும் தருவாயில் தன் மனைவியிடம் மன்னிப்புக்கேட்டு மீண்டும் ஒன்றாக வாழவேண்டும் என்று திட்டமிடுகிறார். 

ஆனால் அவருடைய மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார். இது கணவனுக்கு தெரியாது. ஒருமாத காலம் முடியும் தருவாயில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவி இறந்து போகிறார். இதனை அறிந்த கணவன் மிகவும் மனமுடைந்து போகிறார். 

இந்த குறும்படமானது மிகவும் அழகான முறையில் எடுக்கப்பட்டுள்ளது. கணவன் மனைவியிடையே ஏற்படவேண்டிய புரிதல் தகுந்த காலத்தில் ஏற்பட்டால் மட்டுமே வாழ்க்கை சுகமாக இருக்கும் என்பதனை உணர்த்துகிறது.