என் மகனை காதலிக்க விடமாட்றாங்க..! தலையில் பெட்ரோல் ஊற்றி நெருப்பை எடுத்த பெற்றோர்..! அதிர்ந்த தருமபுரி!

தர்மபுரியில் முத்துசாமி செந்தாமரை தம்பதியினர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கணவன் மனைவி இருவரும் இணைந்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தங்கள் உடல்களின் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளனர். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் இவர்களை கண்டு தடுத்து நிறுத்தி உள்ளனர். உடனே போலீசார் அவர்களை மீட்டு அவர்கள் ஏன் இவ்வாறு மேற்கொண்டனர் என்பதை விசாரிக்க துவங்கினர். விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

முத்துசாமி - செந்தாமரை தம்பதியினருக்கு 22 வயது மிக்க கார்த்திக் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் போலீஸ் பணியில் சேர்வதற்கு பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கார்த்திக் அவரது பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரின் 17 வயது மிக்க மகளை காதலித்து வருவதாக வந்துள்ளார்.

கார்த்தி காதலித்து வருவதை அறிந்த லட்சுமணன் அவரது மகளை வேறு ஒருவருக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளார். கட்டாய கல்யாணம் செய்து கொண்ட அந்த சிறுமி மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதனை பற்றி அறிந்த காதலர் கார்த்திக் தன் காதலியை பார்ப்பதற்காக சென்றபோது அவரை பார்க்க விடாமல் சிறுமியின் வீட்டார் தடுத்துள்ளனர்.

இதனை அடுத்து தொடர்ந்து மனவேதனையில் காணப்பட்ட கார்த்திக் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது தற்கொலைக்கு முயன்ற கார்த்திக்கை அவரது பெற்றோர் காப்பாற்றி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் அங்கு அவருக்கு தேவையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அந்த சிறுமியின் தந்தை லட்சுமணன் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் சேர்ந்து கார்த்திக்கை அந்தப் பெண்ணை பார்ப்பதற்கு வரக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். மீறி வந்து பார்த்தால் கொலை செய்து விடுவோம் எனவும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மிரட்டலை அடுத்து கார்த்திக்கின் பெற்றோர் கடத்தூர் காவல் நிலையத்தில் சென்று லட்சுமணன் மீது புகார் அளித்துள்ளனர்

ஆனால் இந்த புகாரை பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தவறியதன் அடுத்து கார்த்திக்கின் பெற்றோரான முத்துசாமி மற்றும் செந்தாமரை தம்பதியினர் இணைந்து தன் மகனுக்காக நியாயம் கேட்டு தர்மபுரி மாவட்ட கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்றுள்ளனர். 

இந்த தகவலை கேட்டு அறிந்த போலீசார் தற்கொலைக்கு முயன்ற கார்த்தியின் பெற்றோரை மாவட்ட ஆட்சியர் மலர்விழி அவர்களை காண்பதற்கு உள்ளே அனுமதித்துள்ளனர். இருப்பினும் கார்த்திக்கின் பெற்றோர் தற்கொலைக்கு முயன்ற காரணத்தினால் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், தம்பதியினர் இணைந்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.