வீட்டில் சடலமாக கிடந்த ஒரு குழந்தை..! கிணற்றில் சடலமாக மிதந்த 2 பிள்ளைகள்! மரத்தில் சடலமாக தொங்கிய தந்தை! ஸ்ரீபெரும்பதூர் அமானுஷ்யம்!

குடும்பத்தகராறு காரணமாக துப்புரவு தொழிலாளி ஒருவர் தன்னுடைய குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட வடமங்கலம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். ஆறுமுகத்தின் வயது 37. இவருடைய மனைவியின் பெயர் கோவிந்தம்மாள் என்கிற துளசி. துளசியின் வயது 32. இத்தம்பதியினருக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ராஜேஸ்வரி (12) மற்றும் ஷாலினி (10) என 2 மகள்களும், சேதுராமன் என்ற 8 வயது மகனும் இருந்தனர்.

ஆறுமுகம் மற்றும் கோவிந்தம்மாள் அப்பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த வண்ணம் இருந்தன. தகராறு பெரிதாகின்றன போது கோவிந்தம்மாள் தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று விடுவார்.

அதன் பின்னர் ஆறுமுகம் அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருவார். சில நாட்களுக்கு முன்னர் வழக்கம்போல கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதால் கோவிந்தம்மாள் தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனால் இம்முறை ஆறுமுகம் அவரை அழைக்க தன் மாமியாரின் வீட்டிற்கு செல்லவில்லை.

கோவிந்தம்மாள் மனம் மாறி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. வீட்டிற்குள்ளேயே தன்னுடைய பெரிய மகளான ராஜேஸ்வரி கழுத்து நெரிக்கப்பட்டு நிலையில் சடலமாக கிடந்தார். தன்னுடைய மகள் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுத ராஜேஸ்வரி கணவரையும் மற்ற இரு பிள்ளைகளையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தேடி வந்தார்.

நீண்ட தேடுதலுக்கு பிறகு ஆறுமுகம் அந்த ஊர் சுடுகாட்டுப் பகுதியிலிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி தன்னுடைய மற்ற இரண்டு பிள்ளைகளை அருகில் உள்ள கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். உடனடியாக பொதுமக்கள் அப்பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், 4 பேரின் உடல்களையும் மீட்டு எடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர் முதற்கட்ட விசாரணையில், துப்புரவு தொழிலாளியான ஆறுமுகம் சாமியாடி என்பதால் அவ்வப்போது அமானுஷ்ய சக்திகள் பற்றியும் அவர் பேசி வந்துள்ளார். எனவே குழந்தைகளை நரபலி அல்லது அமானுஷ்ய வேலைகளுக்கு எதுவும் பயன்படுத்தியுள்ளாரா என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 3 பிள்ளைகளை கொன்று விட்டு துப்புரவு தொழிலாளி தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.