கணவர் இறந்த பிறகு மனைவி தன்னுடைய மகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்தி நானும் உன்னுடனேயே வந்து விடுகிறேன்..! 6 வயது மகளை இடுப்பில் கட்டிக் கொண்டு 32 வயது சரசு எடுத்த பகீர் முடிவு!
விழுப்புரம் மாவட்டத்தில் நேமூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 38. இவருடைய மனைவியின் பெயர் சரசு. சரசின் வயது 32. இத்தம்பதியினருக்கு வைசாலி என்ற 6 வயது மகள் இருந்தார்.
சரசு அப்பகுதியிலுள்ள அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். கார்த்திக் திடீரென்று தீர்க்கமுடியாத நோயால் பாதிக்கப்பட்டார். கார்த்திக்கை பார்த்து கொள்வதற்காக சரசு மருத்துவமனையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
பின்னர் தன் கணவனை வீட்டில் இருந்தபடி அரசு கவனித்து வந்தார். இதனிடையே நோயானது கார்த்திக்கின் உடல் முழுவதிலும் பரவியது. உடல் மிகவும் நலிவுற்றதால் கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் சரசு மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களுடன் பேசாமல் இருந்து வந்துள்ளார்.
இதனிடையே தானும் தற்கொலை செய்துகொள்வதற்கு முடிவெடுத்தார். அதன்படி இன்று அதிகாலை 5 மணியளவில் சரசு தன் மகள் வைஷாலியை அழைத்துக்கொண்டு வீட்டின் பின்புற கிணறுக்கு சென்றுள்ளார்.
மனதை கல்லாக்கி கொண்டு தன் மகளை கட்டியணைத்தபடி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். சிறிது நேரத்திலேயே இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவம் அறிந்த அக்கம்பக்கத்தினர் அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீயணைப்பு படையினரின் உதவியுடன், இருவரது உடல்களையும் மீட்டு அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவமானது விழுப்புரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.