காஷ்மீர் விவகாரத்தில் மனித உரிமை மீறல்! இந்தியாவுக்கு எதிராக நிற்கும் இங்கிலாந்து தலைவர்!

காஷ்மீரில் மனித உரிமை மீரல்.இங்கிலாந்து எதிர்கட்ட்சி தலைவர் காட்டம்.


இங்கிலாந்து பார்லிமெண்டில் இப்போது லேபர் பார்ட்டி என்கிற தொழிலாளர் கட்சி எதிர் கட்சியாக இருக்கிறது. அதன் தலைவர் ஜெர்மி கார்பைன்.248 எம்.பிக்கள் கொண்ட வலிமையான லேபர் பார்ட்டியின் தலைவர் கார்பைன்.அவர் மிக நாகரீகமான அரசியல் தலைவரான கார்பைன் மனித உரிமை விவகாரத்தில் கடுமையான நிலைப்பாடு எடுப்பவர்.

புல்வாமா தாக்குதலின்போதும் இவரது நிலைபாடு விமரிசிக்கப் பட்டது.முன்பே இவருக்கு யூதர்களுக்கு எதிரானவர் என்கிற பெயர் உண்டு. காஷ்மீரில் இந்தியாவின் நிலைப்பாடு மிகுந்த உளைச்சலைத் தருவதாக கார்பைன் ட்வீட் செய்த உடன் அவர் முன்னால் நான்கு கேள்விகள் வைக்கப்பட்டன.

* ப்ராக்சிட் என்கிற ஐரோப்பிய கூட்டமைபில் இருந்து விலகும் டோரி கட்சியை எதிர்க்க காஷ்மீரை பயண்படுத்துகிறீர்களா?

*இந்தியா சுதந்திரமான ,தனித்த இறையாண்மை கொண்ட நாடு,அது எந்த வகையிலும் இங்கிலாந்துக்கு கட்டுப்பட்டதில்லை என்பதை மறுக்கிறீர்களா.

* காஷ்மீரின் முன்னேற்றத்துக்காக 370வது சட்டப்பிரிவு நீக்கப் படுகிறது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா.

*மியூனிச் படுகொலைகள் விஷயத்தில் பாலஸ்தீனியர்களை கார்பைன் ஆதரிதது எப்படி.

இங்கிலாந்தின் வலதுசாரி பத்திரிகையான டெய்லி மெய்ல் பத்திரிகையில் பாலஸ்தீனிய தீவிரவாதிகளின் கல்லறையில் மலர் வளையம் வைத்த செய்திகள் வெளிவந்ததும் சுட்டிக் காட்டப் படுகிறது .

இதில் இஸ்ரேலின் நண்பராக தன்னை காட்டிக் கொள்ளும் ஆர்.எஸ் பெய்ன்ஸ்,மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஜோசப் டி நூனி என்கிற மாணவரும் பிரிட்டன் சாம்ராஜ்யம் இப்போது இல்லை என்பதை நினைவூட்டி டிவிட்டரில் கார்பைனை கலாய்த்திருக்கிறார்கள்.

அதே சமயத்தில் யாஸ்மின் குரேஷி மற்றும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த 8 எம்பிக்களும் இந்திய அரசின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

அதே சமயம் லண்டனில் இருக்கும் இந்திய ஹைக் கமிஷன் முன்னால் பாகிஸ்தான் ஆதரவு குடிமக்கள் காஷ்மீர் பிரட்சினை குறித்து நடத்திய போராட்டங்கள் இணைய வெளியில் பெரிதாகக் கண்டு கொள்ளப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.