500க்கு ஒரு மார்க் குறைந்தாலும்..! பெற்ற மகளை ட்யூசன் ஆசிரியையுடன் சேர்ந்து தாய் செய்த விபரீத செயல்!

காலாண்டு தேர்வில் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற வேண்டும் என்று சிறுமி கடுமையாக தாக்கப்பட்ட சம்பவமானது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


பெதெல்புரம் மெர்னா பள்ளியில்  சிறுமியொருவர் பயின்று வருகிறார். நேற்று பள்ளிக்கு சென்ற அந்த மாணவி தேர்வு எழுத முடியாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளார். ஆசிரியர்கள் முதலில் அவரிடம் கேட்டபோது பயத்தில் அவர் எதையும் அதன் பின்னர் ஆசிரியர்கள் தொடர்ந்து கேட்டபோது தன்னுடைய தாயாரின் தோழி நடத்தும் டுயூஷன் சென்டரில் படிப்பதாக கூறினார். 

அங்கு டியூஷன் ஆசிரியர் தன்னை கடுமையாக கொடுமைப்படுத்தியதாக சிறுமி கூறியுள்ளார். உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் சிறுமியின் தாயாரை பள்ளிக்கு வருமாறு கட்டளையிட்டார். உடனடியாக அவர் தன்னுடைய தோழியுடன் பள்ளிக்கு விரைந்து சென்றுள்ளார். அப்போது அவர்கள் இருவருடனும் பள்ளி நிர்வாகத்தினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

அப்போது இருவரும் கூறியது பள்ளி நிர்வாகத்தினருக்கு ஆச்சரியத்தை அளித்தது. அந்த சிறுமி காலாண்டு தேர்விற்கு முன்னர் நடைபெற்ற தேர்வுகளில் 100-க்கும் சற்று குறைவான மதிப்பெண்னையே எடுத்து வந்துள்ளார்.

இதனால் சிறுமியின் தாயார் தன் தோழியிடம் என்ன செய்தாவது சிறுமியை 500/500 மதிப்பெண் எடுக்க வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.அதனால் நான் டியூஷன் ஆசிரியர் காட்டுமிராண்டித்தனம் போல குழந்தையை தாக்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக இருவர் மீதும் அதே பகுதியில் இயங்கிவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Pic Courtesy: mrchenews.com