தீபாவளியன்று 4 மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
தீபாவளியன்று 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து எடுக்கும்! வானிலை எச்சரிக்கை எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்து புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு கியார் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மும்பை தெற்கு-பெருமையா இருக்கு திசையில் 380 கிலோ மீட்டர் அளவில் புயல் உள்ளது. அந்த நாட்களில் புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். 24 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், அதற்கடுத்த 12 நேரத்தில் அதிதீவிர புயலாகவும் மாறும்.
மேற்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையும் மேலடுக்கு சுழற்சியும் நிலவுவதால், அடுத்த சில நாட்களில் ஆந்திரா, ஒரிசா, அசாம் ஆகிய மாநிலங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிகச்சில இடங்களிலேயே மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. வெப்ப சலனம் காரணமாக தீபாவளியன்று ஈரோடு, தர்மபுரி, சேலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகவும், அதற்கு அடுத்த இரு நாட்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரத்திற்கான வானிலை அறிக்கை குறித்து தேசிய வானிலை மையம் தெளிவாக கூறியுள்ளது