பிகில் சிறப்புக் காட்சி! விஜய் ரசிகர்கள் பெரும் வன்முறை! கடைகளுக்கு தீ வைப்பு! கிருஷ்ணகிரி பதற்றம்!

பிகில் திரைப்படம் சிறப்பு காட்சி வெளியிடுவதற்கு தாமதமாதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரவுண்டானா அருகே பிரபல திரையரங்கம் அமைந்துள்ளது. இங்கு பிகில் சிறப்புக்காட்சி வெளியிடப்போவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் ஆரவாரத்துடன் டிக்கெட்டுகளை வாங்கி முடித்தனர்.

குறிப்பிட்ட நேரத்தில் நிர்வாகிகளால் படத்தை வெளியிட இயலவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சற்று லோக்கலான புளீங்கோஸ் அப்பகுதியில் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். தியேட்டருக்கு அருகே அமைந்துள்ள கடைகளின் பேனர்களை சேதப்படுத்தி, தீ வைத்து எரித்துள்ளனர்.

இரவு நேரம் என்பதால் அவர்களை கேட்பதற்கு யாருமில்லை. மேலும் கற்களை வீசி சாலையை மிகவும் பயங்கரமாக அலற விட்டனர். சாலையோரத்தில் நிற்க வைக்கப்பட்டிருந்த பாரிகேடுகளை கீழே தள்ளி விட்டு அதன் மீது குதித்து உடைத்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரகளைகள் நடந்துகொண்டிருந்தபோது காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். உடனடியாக ரகளையை அடக்கி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவமானது கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே அதிகாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.