தன்னுடைய அழகு குறைந்துவிடும், உடல் குண்டாகிவிடும் என்பது போன்ற காரணங்களால்தான் நிறைய பெண்கள் குழந்தை பெறுவதை தள்ளிப்போடுகிறார்கள். இது உண்மை என்பதுபோல் பிரசவத்திற்கு பிறகு நிறைய பெண்கள் குண்டாகவும் செய்கிறார்கள். பெண்களின் உடல் பருமனை குறைக்கும் வழிகளை பார்க்கலாம்.
பிரசவத்திற்கு பிறகு குண்டான உடம்பை குறைப்பது எப்படி??

·
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் உடலில் அதிக கலோரிகள் எரிக்கப்படும் என்பதால் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கவேண்டும்.
·
நிறைய தண்ணீரும் பழங்களும் சாப்பிடுவதன் காரணமாக உணவு உட்கொள்வது குறைந்து உடல் எடை குறையத் தொடங்கும்.
·
பிரசவம் முடிந்ததும் உடற்பயிற்சி மேற்கொள்வது சரியாக இருக்காது என்பதால் யோகா, தியானம் செய்து உடலை கட்டுப்படுத்த வேண்டும்.
·
வயிற்றை குறைப்பதற்கு தற்போது பெல்ட் போடும் பழக்கம் நடைமுறையில் உள்ளது, இதனை பயன்படுத்தலாம்.