உங்கள் வீட்டில் வாஸ்து குறை உள்ளதா..? செலவு இல்லாத ஆன்மிக பரிகாரங்கள்

ஒரு வீடு சிறப்பாக அமையவும் அந்த வீட்டில் வசிப்பவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வாழவும் வேண்டுமானால் அந்த வீடு வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் எந்த ஒரு குறையும் இல்லாமல் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும்.


ஆனால் சிலர் அவசரம் கருதி அல்லது செலவுகளை குறைக்க நினைத்து வாஸ்து சாஸ்திரத்தைப் பெரிதும் பொருட்படுத்தாமல் வீட்டை கட்டிவிட்டு பிறகு அவஸ்தைப்படுகின்றனர். பின்னர் கட்டிய வீட்டில் பெரும் செலவு செய்து வாஸ்துப்படி மாற்றங்களை செய்து கொள்கின்றனர்.

செலவு செய்து வீட்டை மாற்றியமைக்க வசதியில்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம். எல்லாவற்றிற்கும் பரிகாரம் உள்ளது. பரிகாரங்களை சரிவர செய்து வந்தால் வாஸ்துவினால் ஏற்படும் தோஷம் விலகி நலன் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

பூஜைகளின் மூலம் வாஸ்து தோஷங்களை நீக்கலாம். அதற்காகப் பெரிய சிரமங்கள் எதுவும் படத்தேவையில்லை. வீட்டில் தினமும் ஊதுவர்த்தி காட்டி சாமி படங்களுக்கு பூஜை செய்து வந்தாலே போதும். வீட்டில் எந்த கெட்ட சக்தியும் அண்டாது. ஆண்டுக்கொரு முறை கணபதி ஹோமம் நடத்தினால் நல்லது. வெள்ளிக்கிழமையில் துர்க்கைக்கு எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றலாம்.

 தினமும் மாலை நேரங்களில் கட்டாயமாக வீடுகளில் விளக்கேற்றி வைக்க வேண்டும்.

இதே போல் உள்ள பல பரிகாரங்களில் மிகவும் முக்கியமான எளிய பரிகாரம் இதோ:

வீட்டில் வாஸ்து புருஷனின் படத்தை மாட்டி வைத்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வாஸ்து புருஷனின் மந்திரத்தைச் சொல்லி வழிபடலாம் தினமும் காலை மாலை 1,008 முறை இந்த மந்திரத்தை பாராயணம் செய்தாலே சில மாதங்களிலேயே வீட்டில் ஏற்பட்ட தோஷம் பெருமளவு நீங்கிவிடும்.

ஓம் வாஸ்து புருஷாய நம:

ஓம் ரக்தலோசனாய நம:

ஓம் க்ருச்யாங்காய நம:

ஓம் மஹா காயாய நம: