சைலன்ட் கில்லர் எனப்படும் ஹைபர்டென்ஷனை எப்படி கண்டறிவது?

கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஆபத்தான நோய்களில் ஒன்று உயர் ரத்தஅழுத்தம் என்று அறியப்படுகிறது.. இந்த நோயினால் ஏற்படும் அறிகுறிகள் உடனடியாக வெளியில் தெரிவதில்லை என்பதால் இந்த நோயை சைலன்ட் கில்லர் என்கிறார்கள். 2 முதல் 3 சதவிகித கர்ப்பிணிகளுக்கு இந்த நோய் சிக்கல் உண்டாக்குகிறது. என்ன காரணங்களால் இந்தப் பிரச்னை வருகிறது என பார்க்கலாம்.


·         பொதுவாக உப்பு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் பெண் பிள்ளைகளுக்கு சின்ன வயதில் இருந்தே உப்பு குறைவாக கொடுப்பது மிகவும் நல்லது.

·         கர்ப்பிணிகளில் பெரும்பாலோருக்கு பரம்பரைத்தன்மை காரணமாக மரபுவழியில் ஹைபர்டென்ஷன் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

·         சிறுநீரகத்தொற்று, சிறுநீரக பிரச்னை இருக்கும் பெண்களுக்கு ஹைபர்டென்ஷன் கர்ப்பத்திற்கு முன்போ, கர்ப்ப காலத்திலோ ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

·         அதிக டென்ஷன், பயம், கோபம் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆட்படும் பெண்களுக்கு உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

பொதுவாக உயர் ரத்தஅழுத்த அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை என்றாலும் படபடப்பு, அடிக்கடி தலைவலி, நெற்றி மற்றும் எலும்பு இருக்கும் பகுதிகளில் துடிப்பு ஏற்படுவதை அறிகுறிகளாக எடுத்துக்கொள்ளலாம். கர்ப்பிணிகளை பாதிக்கும் உயர் ரத்தஅழுத்தம் பற்றி நாளை மேலும் அறிந்துகொள்ளலாம்.