கொலு வைக்கும் பழக்கம் இல்லாதவர்கள் நவராத்திரியை எவ்வாறு கொண்டாடலாம் தெரியுமா ?

இந்தியா முழுவதும் பரவலாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று நவராத்திரி திருவிழாவாகும் .


நவராத்திரி திருவிழாவில் பக்தர்கள் கொலு பொம்மைகளை ஒன்பது படிக்கட்டுகளில் அமைத்து அலங்காரம் செய்து வழிபடுவதை நம் முன்னோர்கள் காலத்திலிருந்து கடைபிடித்து வருகிறோம் .

ஆனால் சிலர் கொலு வைக்கும் பழக்கம் இல்லாதவர்களாக இருந்தால் எவ்வாறு நவராத்திரி திருவிழாவை கொண்டாடலாம் என்பது பற்றி இனி நாம் காண்பூம் .

கொலு வைக்க இயலாதவர்கள் தாங்கள் வணங்கும் தெய்வங்களுக்கு பூ அலங்காரம் செய்து , நவராத்திரி ஒன்பது நாட்களுக்கும் ஒவ்வொரு வகையான தானியங்களை சமைத்து அதை அம்பாளுக்கு வைத்து வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும் என முன்னோர்கள் கடைபிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது