திமுகவினர் உதயநிதி ஸ்டாலின், சபரீசனை எப்படிக் கூப்பிடணும்னு தெரியுமா..?

தி.மு.க. கட்சியில் இள ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது. அதாவது ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த அடுத்த தலைமுறையினர், அடுத்த வாரிசாக வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவர்களை இப்படித்தான் கூப்பிடவேண்டும் என்று சொல்லப்படவே, கொந்தளிக்கிறது தி.மு.க.


மாற்றம் என்பதுதான் மாறாத ஒன்று என்பார்கள். அந்த வகையில் தி.மு..வில் நடந்திருக்கும் மாற்றத்தைக் கண்டு சீனியர் நிர்வாகிகள் கொதித்துப்போய் இருக்கிறார்கள்.

அதாவது துரைமுருகனாக இருந்தாலும் சரி, லோக்கல் நிர்வாகியாக இருந்தாலும் சரி இப்படித்தான் குறிப்பிட்ட சிலரை அழைக்கவேண்டும் என்று பட்டியலே போட்டிருக்கிறார்கள்.


அதாவது ஸ்டாலினை மூத்த நிர்வாகிகள் மட்டும் தளபதி என்றும், தலைவர் என்றும் அழைத்துக்கொள்ளலாம். மற்ற அனைவருமே கண்டிப்பாக தலைவர் என்றுதான் கூப்பிடவேண்டும். எந்தக் காரணம் கொண்டும், தலைவர் ஸ்டாலின் என்று பெயரைக் குறிப்பிடக்கூடாது. தலைவரோடு நிறுத்திக்கொள்ள வேண்டுமாம்.

உதயநிதி ஸ்டாலினையும் பெயர் சொல்லி அழைக்கக்கூடாது.


  சின்னவர் என்றுதான் அழைக்கவேண்டும். அவருக்கும் பெயர் சொல்லக்கூடாது.இப்போது மூன்றாவது ஒருவரும் அறிமுகப்

படுத்தப்பட்டுள்ளார். அவர் சபரீசன். அவரை டைரக்டர் என்று அழைக்க வேண்டுமாம்.  

ஸ்டாலின் தொடங்கிய நமக்கு நாமே திட்டத்தை இவர்தான் வடிவமைத்தார்.


ஸ்டாலின் எப்படி பேசவேண்டும், எப்படி சிரிக்க வேண்டும், என்ன கலர் உடை அணிய வேண்டும், யாருடன் எல்லாம் செல்பி எடுக்க வேண்டும் என்பதையெல்லாம் இயக்கியது சபரீசனே. அதனால்தானோ என்னவோ அப்போதே டைரக்டர் என்று சொன்னார்கள்.


இப்போது ஸ்டாலின் தொடங்கி தி.மு.. என்ற கட்சியையும் இயக்குவதால் டைரக்டர் என்று அழைக்க வேண்டுமாம்.இதற்கெல்லாம் சம்மதித்து சொல்வதைக் கேட்டு நடப்பவர்தான் தி.மு..வில் நிலைக்கமுடியும்.. கல்யாணப் பத்திரிகை என்றாலும் கட்சி நிகழ்ச்சி என்றாலும் தலைவரை மட்டும் பார்த்துவிட்டு செல்லக்கூடாது. எத்தனை நேரம் ஆனாலும் மற்ற இருவரையும் சந்தித்துவிட்டுத்தான் போக வேண்டும்.


எந்தக் காரணம் கொண்டும் அறிவாலயத்தில் வைத்து தயாநிதி மாறன், கலாநிதி மாறன், கனிமொழி, அழகிரி போன்ற பெயர்களை உச்சரிக்கக் கூடாதாம்.ஆட்சிக்கு வரும் முன்னரே ஆட்டம் பலமாக இருக்கிறதே...!