ஒரே ராசியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா? அப்படி செய்தால் என்னவாகும்?

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். இல்லறத்தின் இனிய வரம். ஆனால் இது எல்லோருக்கும் இனிமையாக அமைவதில்லை.


ஏக ராசியை கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

மேஷம் : மேஷ ராசிக்காரர்கள் தான் செய்வதே சரி என்று நினைப்பவர்கள். இந்த ராசி ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் இவர்களின் உறவில் தொடர் பிரச்சனை, சண்டை, சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்கள் விடாமுயற்சியும், இலட்சியத்தையும் நோக்கிப் பயணிப்பவர்கள். இந்த ராசியில் உள்ள ஆணும், பெண்ணும் இணையும்போது இவர்களின் எண்ணங்கள், கருத்துகள் ஒரே மாதிரியானதாக இருக்கும். வாழ்க்கையை ஈடுபாட்டுடனும், உற்சாகத்துடனும் வாழ்வார்கள்.

மிதுனம் : மிதுன ராசிக்காரர்கள் மகிழ்ச்சியான நேரத்திலும் எல்லை மீறாதவர்கள். இந்த ராசி ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் இவர்களின் உறவில் ஈர்ப்பு இருக்கும். ஆனால் இவர்களில் ஒருவர் ஈர்ப்புடன் இருந்தால், மற்றொருவர் சமநிலை இன்றி காணப்படுவார்.

கடகம் : கடக ராசிக்காரர்கள் யாருக்காகவும் தன் குறிக்கோளை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். கடக ராசி ஆணும், பெண்ணும் திருமணம் செய்தால் உணர்ச்சிப்பூர்வமான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒருவர் மற்றொருவருடைய உணர்வைப் புரிந்து நடந்து கொள்வார்கள்.

சிம்மம் : சிம்ம ராசிக்காரர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாதவர்கள். இந்த ராசி ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் இவர்களின் மத்தியில் முதலில் நிற்பது முன்கோபமாகதான் இருக்கும். இதனால் பொறுமையுடன் வாழ்க்கை நடத்தினால் பிரச்சனைகள் குறையும்.

கன்னி : கன்னி ராசிக்காரர்கள் காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர்கள். இந்த ராசி கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் ஒருவர் மீது ஒருவர் அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.

துலாம் : துலாம் ராசிக்காரர்கள் வெற்றி நோக்குடன் செயலாற்றுபவர்கள். இந்த ராசி கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் இவர்கள் தங்களுக்குள் செய்யும் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்வார்கள். ஒருவருக்கொருவர் நன்கு புரிந்துகொண்டால் இவர்களின் உறவில் பிரிவு உண்டாகாது.

விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்கள் சாதனைப் படைக்கும் மனம் கொண்டவர்கள். இந்த ராசி கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் இவர்கள் மத்தியில் ஈர்ப்பும், கவர்ச்சியும் அதிகமாக இருக்கும். ஆனால், இவர்களின் வாழ்வில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தனுசு : தனுசு ராசிக்காரர்கள் எடுத்த காரியத்தை திறமையுடன் முடிப்பார்கள். இந்த ராசி ஆணும், பெண்ணும் திருமண பந்தத்தில் இணையும்போது ஒற்றுமையாக காணப்படுவார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும் என்று விரும்புவார்கள்.

மகரம் :சுறுசுறுப்புடன் பணிகளை செய்து முடிக்கும் திறன் படைத்தவர்கள் மகர ராசிக்காரர்கள். இந்த ராசி ஆணும், பெண்ணும் இணையும்போது ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வார்கள். இதனால் இவர்களின் உறவு சிறப்பாக இருக்கும்.

கும்பம் : கும்ப ராசி கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் இவர்கள் ஒருவரை ஒருவர் சகித்துக்கொண்டு வாழும் திறன் கொண்டவராக இருப்பார்கள்.

மீனம் : மீன ராசிக்காரர்கள் தனித்துவம் வாய்ந்தவர்களாக விளங்குவார்கள். தன்னலமற்ற மீன ராசி கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் இருவேறு பார்வைகள் கொண்டவர்களாக இருப்பார்கள்.