கர்ப்பிணி ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

பொதுவாகவே அனைவரும் தினமும் போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்கவேண்டியது உடல் நலனுக்கு இன்றியமையாதது. கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை வழக்கத்தைவிட அதிகமாக, அதாவது குறைந்தது 12 டம்ளர் தண்ணீர் குடிக்கவேண்டும். இதனால் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படும் என்பதால் சிறுநீரக பிரச்னைகள் தடுக்கப்படும்.


• உடலில் நீர்ச்சத்து போதுமான அளவில் இருந்தால்தான், வயிற்றுக்குள் குழந்தையின் அசைவு நன்றாக இருக்கும்.

• பனிகுட நீர் உருவாகவும், சமநிலையில் நீடிப்பதற்கும் கர்ப்பிணி பெண் போதுமான தண்ணீர் குடிக்கவேண்டியது அவசியமாகும்.

• சிறுநீர் பாதையில் தொற்றுநோய் உண்டாகும் அபாயத்தை தண்ணீர் குறைக்கிறது. குறிப்பாக கோடை காலத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்கவேண்டும்.

• கர்ப்பிணிகளுக்கு பெருந்துன்பம் கொடுக்கும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பதற்கும் தண்ணீர் பயன்படுகிறது. 

ஒரே நேரத்தில் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல், போதிய இடைவெளி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பது நல்லது. இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவு இராது.