அன்னை தெரசா புனிதராக மாறியது எப்படி தெரியுமா?

அன்பு, கருணை, மனித நேயம் என்ற வார்த்தைகளுக்கு இலக்கணமாக வாழ்ந்து ஆதரவற்றவர்களுக்கு தன்னுடைய அன்பின் மூலமாக பெரிய ஆதரவு அளித்தவர் அன்னை தெரேசா.


கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி  வாடிகனில்   அன்பின் உறைவிடமான அன்னை தெரசாவுக்கு "புனிதர் பட்டம் " வழங்கப்பட்டது. 

புனிதர் பட்டம் என்பது பொதுவாக அற்புதங்கள் நிகழ்த்தியவர்களுக்கு  மட்டும்தான் அளிக்கப்படும். அந்த வகையில் அன்னை தெரசாவால் நிகழ்ந்த சில அற்புதங்களை நாம் காண்போம். 

ரோமன் கத்தோலிக்கர்களில் ஒருவர் இறந்தால் அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் . அந்த பட்டத்தை வழங்கும் அதிகாரம் கத்தோலிக்க திருச் சபைக்குதான் உள்ளது. 

மேற்கு வங்கத்தில் வாழ்ந்து வந்த மோனிஷா என்ற பெண்மணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்திருந்தார். 

இதனையடுத்து அவர் அன்னை தெரேசா அவர்களின் உருவம் பொறித்த சங்கிலியை தன் கழுத்தில் அணிந்துகொண்டார் இதற்குப்பின் அவருக்கு புற்றுநோய் குணம் ஆனதாக  கூறியிருந்தார் . இதனை வாடிகன் திருச்சபை தீவிரமாக விசாரித்து நிரூபணமும் ஆனது. இதனையடுத்து அவருக்கு அருளாளர் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.

இதுமட்டுமல்லாமல் அன்னை தெரேசாவின் அற்புதம் பிரேசில் நாட்டில் உள்ள ஒருவருக்கும் நிகழ்ந்தது. 

பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர் மூளையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார் . இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அன்னை தெரேசாவை  இவருக்காக மிகவும் உருக்கமாக மனமுருகி வேண்டிக் கொண்டனர் . இதனை அடுத்து அவர் பூரண குணமடைந்த அற்புதம் நிகழ்ந்துள்ளது. இது இரண்டாவது அற்புதமாக கருதி அவருக்கு புனிதர் பட்டம் வழங்கலாம் என்றும் வாடிகன் திருச்சபை அறிவித்தது.

அன்னை தெரேசா தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளியவர்களுக்கும் நோயால் அவதிப்படுபவர்களுக்கு உதவி செய்யும் நல்ல குணம் படைத்தவர். இந்த கருணை கடல் கடந்த 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.