மளிகை கடையில் பொட்டணம் மடித்துக் கொண்டிருந்தவர்..! இன்று ஆண்டுக்கு 220 கோடி வருமானம் பார்க்கும் அணில் சேமியா அதிபதி! எப்படி தெரியுமா?

பல்வேறு சிரமங்களை சந்தித்து முன்னேற்றம் பெற்றுள்ள அணில் சேமியா நிறுவனத்தின் வரலாற்றை இந்த செய்தியில் காண்போம்.


அணில் சேமியா நிறுவனத்தின் நிறுவனர் பெயர் நாகராஜ். இவர் முதன்முதலில் ஜூபிடர் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். அதற்கு முனிவர் மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். பின்னர் ஜூபிடர் சரிவுகளில் தொடர்ந்து சந்தித்து வந்த போது தான், புதிதாக அணில் சேமியா என்ற நிறுவனத்தை 1984-ஆம் ஆண்டில் நாகராஜ் துவங்கினார்.

நாகராஜுக்கு சுகுமாரன் மற்றும் கமல்ஹாசன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். நாகராஜுக்கு பிறகு இவர்கள் இருவரும் தான் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். பின்னர், கடையில் புத்தம் புதிய முறைகளை புகுத்தி கோடிக்கணக்கான உற்பத்தியை செய்து வருகின்றனர்.

முதலில் இனிப்பு பொருள் தயாரிப்பதற்கு மட்டும் உபயோகப்படுத்தப்பட்ட சேமியாவை, சேமியா உப்புமா போன்ற டிபன் வகைகளிலும் உபயோகப்படுத்த இயலும் என்பதை மக்களிடம் புகுத்தியுள்ளனர். அப்போதிலிருந்து மக்களின் தேவையை சரியாக கணித்து அவற்றை சந்தையில் முன் நிறுத்தி வருகின்றனர்.

அந்த காலத்தில் வழங்கப்பட்ட ரேடியோ விளம்பரமானது அணியை சேமியாவின் விற்பனையை பல மடங்கு அதிகரித்தது. நிறுவனம் பிரபலம் அடைவதற்கு நாகராஜின் உழைப்பு தான் முழுமுதல் காரணம். 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாவிட்டாலும், நாகராஜ் வாழ்க்கை தனக்கு வைத்து தேர்வுகள் அனைத்திலும் வெற்றி பெற்றார். 

தற்போது அணில் சேமியா, ராகி சேமியா போன்று 25 சேமியா வகைகளை தயாரித்து ஆண்டுக்கு 220 கோடிவரை ஈட்டி வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவிலும் அணில் சேமியாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், மக்கள் அதனை விரும்பி சுவைக்கின்றனர்.

புதிதாக அணில் சேமியா நிறுவனம் கம்பு,வரகு,கோதுமை ஆகிய பொருட்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அணில் சேமியா நிறுவனம் மென்மேலும் லாபங்கள் பெற எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.