மாடுகள் உணவை உட்கொண்ட உடனேயே அசை போடாமல் கொஞ்ச நேரம் கழித்து திரும்ப அந்த உணவை வாய்க்கு வரவழைத்து அசை போடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்
மாடுகள் சாப்பிட்ட பிறகு ஏன் அசை போடுகின்றன தெரியமா?

பசுவின் வயிற்றில் நான்கு அறைகள் உண்டு. பசுவானது உணவு உட்கொண்டதும் அது வயிற்றின் முதல் அறைக்குச் செல்கிறது. நான்கு அறைகளில் மிகப் பெரியது இது தான். அங்கே வந்து சேரும்போது உணவு சரியாக மெல்லப்பட்டிருக்காது. இந்த பகுதியில் ஈரப்பதம் உண்டு. இந்த ஈரப்பதத்தோடு கலந்து உணவானது இரண்டாவது அறைக்குச் செல்லும் போது சின்ன சின்ன உருண்டைகள் போல உணவு ஆக்கப்படுகிறது.
இந்த உருண்டைகள் அடுத்ததாக மூன்றாவது அறைக்குச் செல்லாமல் வாய்ப் பகுதிக்குச் செல்கிறது. அந்த அங்கு அந்த உணவு மெல்லப்பட்டு நுண்ணிய சிறு துகள்கள் ஆக்கப்படுகிறது. இதைத்தான் நாம் பசு அசைபோடுகிறது என்கிறோம். அதற்குப் பிறகு அந்த உணவு வயிற்றின் மூன்றாவது நான்காவது அறைகளுக்கு அனுப்பப்பட்டு முழுமையாக செரிமானம் ஆகிறது.
விலங்குகள் அசைபோட இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று இவற்றின் மேல் தாடையில் பற்கள் இருக்காது. எனவே உணவை நன்கு மெல்வதற்கு அதிக நேரம் பிடிக்கிறது. இரண்டாவது அவை வாழ்ந்த சூழல். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சிங்கம் புலி உள்ளிட்ட கொடிய விலங்குகளோடு தான் மேற்படி மிருகங்களும் காட்டுப் பகுதியில் வாழ்ந்து வந்தன.
உணவு கிடைத்தால் டக்கென்று வாயில் போட்டுக் கொண்டு அந்த
இடத்திலிருந்து மறைந்து விட வேண்டும் என்ற பய உணர்வு அவற்றுக்கு. பாதுகாப்பான பகுதிக்கு
சென்ற பிறகு அந்த உணவை அசை போடலாம் என்று அவற்றிற்குத் தோன்றின. இவைதான் மாடுகள் அசைபோடுவதற்கு
காரணம்.