கோவையில் 10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்றியது எப்படி? அதிர்ச்சி தரும் பின்னணி!

உலகையே உலுக்கும் கொரோனா தொற்று யாரையும் விட்டு வைப்பது இல்லை, அந்த வகையில் கோவையில் உள்ள இரயில்வே மருத்துவர் மற்றும் அவரது 10 மாத குழந்தை உட்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.


இதில் என்னவென்றால் 10 மாத குழந்தைக்கு எப்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பது தான். உலகையே உலுக்கும் கொடூர கொரோனா பெரியவர்கள், சிறியவர்கள், குழந்தைகள் என எவ்வித பாகுபாடுன்றி அனைவரின் உயிரையும் கொன்று கொண்டு இருகின்றது.

இந்தியா மூன்றாம் கட்டத்திற்கு முன்னேறாமல் இருப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுத்து கொண்டு வருகின்றது. இந்நிலையில், தமிழகத்தில் தற்போது வரை 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகியுள்ளது.

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த 29 வயது பெண் மருத்துவர் ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 20ம் தேதி அன்று அவரை கோவை போத்தனூர் ரயில்வே மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், பணியில் சேரும்போதே அவர் காய்ச்சல் பாதிப்பில் இருந்துள்ளார். காய்ச்சல் இருப்பதினால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

மருத்துவ பரிசோதனையில் இவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனடியாக அவருடன் பழகியவர்கள் மற்றும் அவர் குடும்பதினர் என அனைவரையும் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், போத்தனூர் ரயில்வே மருத்துவமனை பூட்டப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.  

இதனையடுத்து, பெண் மருத்துவர் அவருடன் பழகிய நபர்களுக்கு கொரோனா தொற்று சோதனை செய்தலில் பெண் மருத்துவர் மட்டுமின்றி அந்த மருத்துவரின் தாயார், மருத்துவமனையில் பணியாற்றிய பணிப் பெண் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சோகம் என்னவென்றால், அந்த டாக்டரின் 10 மாத குழந்தைக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதுதான். 

இதன்பின்னர், அந்தப் பெண் மருத்துவருக்கு எப்படி கொரோனா தொற்று உறுதியானது என்று நேற்று தகவல் கிடைத்துள்ளது. தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்திருந்த இரண்டு பேருக்கு ஏற்கெனவே கொரோனா உறுதி செய்யப்பட்டு பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களுடன் பயணித்த ஈரோட்டைச் சேர்ந்த இந்தியர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த ஈரோட்டைச் சேர்ந்தவர் மூலம், பெண் மருத்துவருக்கு கொரோனா வைரஸ் வந்துள்ளது என்பதை கண்டு அறிந்தனர்.

அதுமட்டுமின்றி, அந்தப் பெண் மருத்துவரின் கணவர் மற்றொரு குழந்தை ஆகியோரும் கொரோனா அறிகுறியுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றாதா என்று பரிசோதனைகள் செய்து வருகின்றனர்.