எல்கேஜி படிக்கும் மகனுக்காக தெர்மாகோல் ப்ராஜெக்ட்! நொடியில் நேர்ந்த விபரீதம்! துடிதுடித்து உயிரிழந்த தாய்! அதிர வைக்கும் சம்பவம்!

ப்ராஜெக்ட் ஒர்க் செய்து கொண்டிருந்தபோது விளக்கு விழுந்ததில் தீப்பற்றி தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வடசென்னையில் எண்ணூர் எனுமிடம் அமைந்துள்ளது. இங்குள்ள பாரதியார் நகரில் ஜெபா என்பவர் வசித்து வந்தார். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜெபசீலன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு நெல்சன் என்ற 4 வயது மகன் உள்ளான். இவன் அதே பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பு படித்து வருகிறான்.

பள்ளியில் ப்ராஜெக்ட் வொர்க் செய்வதற்காக நெல்சனுக்கு தாய் ஜெபா உதவி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக தெர்மாகோலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் கீழே விழுந்து சிதறியது. 

மண்ணெண்ணெய் சிதறியதால் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. மேல்தளத்தில் ஜெபா சிக்கிக்கொண்டார். ஜெபசீலன் தன்னுடைய மகன் நெல்சனை வெளியே விட்டுவிட்டு மனைவியை காப்பாற்ற எண்ணினார். ஆனால் அவர் மீண்டும் வீட்டிற்கு செல்வதற்கு முன்னர் தீ முழுவதுமாக பரவியது.

தீயில் சிக்கி கொண்ட ஜெயா உடல் கருகி உயிரிழந்தார். சம்பவமறிந்த எண்ணூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஜெபாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது எண்ணூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.