ஓட்டல் சாப்பாட்டில் ஆரோக்கியம் பெறுவது எப்படி?

பொதுவாக ஒரு மனிதன் தொடர்ந்து மூன்று வருடங்கள் வரை ஓட்டல் சாப்பாட்டில் வாழ்ந்தால் அவருடைய ஆரோக்கியம் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டு விடுகிறது.


நம்மில் பலருக்கு வீட்டு சாப்பாடு கிடைக்காத பட்ஷத்தில் ஓட்டல் சாப்பாட்டையே நாட வேண்டியுள்ளது.  நிறைய காரணங்களினால் இது தவிர்க்க முடியாதாக உள்ளது. எனவே ஓட்டல் சாப்பாட்டில் வாழும் மனிதன் காலையில் ஒரு கேரட்டும் இரண்டு வாழைப்பழமும் சாப்பிட்ட பின்தான் டிபன் சாப்பிட வேண்டும். அத்துடன் கடலை, பச்சைப் பயறு போன்ற முளைவிட்ட பயிறு வகைகளை ஒரு கைப்பிடி சாப்பிடலாம். மதியம் சாப்பாட்டிற்கு முன்பு ஒரு வெள்ளரிக்காய், ஏதாவது ஒரு பழம் சாப்பிட்டபின் சாப்பாடு சாப்பிடலாம்.  மாலை இரண்டு வெற்றிலையும், கடலை மிட்டாயையும் சேர்த்துச் சாப்பிடவும்.  இரவு 7 மணிக்குள் உணவை முடித்துவிட வேண்டும். தூங்கும்போது பசித்தால் ஒரு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு படுக்கவும்.  சாறுகள் சாப்பிட வசதியிருந்தால் காலை, மாலை இரண்டு வேளையும் இயற்கைச் சாறுகளை சாப்பிட வேண்டும்.  இந்த உணவு முறையினால் ஹோட்டல் சாப்பாட்டின் அளவு பாதியாக குறைந்துவிடும். ஆரோக்கியமும் வளரும்.