பற்ற வைத்தால் விதைகள் வெடிக்கும்..! செடிகள் முளைக்கும்..! வந்துவிட்டது ரியல் பசுமை பட்டாசு..!

சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை வெடிவிதை பட்டாசுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.


அடுத்த ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. வழக்கம் போன்று பட்டாசுகளை வெடித்து மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடபோகின்றனர்.

இந்நிலையில் சுற்றுச்சூழலின் பாதுகாப்பானது இன்றியமையாதது என்பதை உணர்த்தும் வகையில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புதுரக பட்டாசுகளை தயாரித்துள்ளது.

நண்ணூட்டச்சத்துக்கள், உரங்கள் முதலியவற்றை பயன்படுத்தி சங்குச்சக்கரம், ராக்கெட் போன்ற பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பட்டாசுகளாக தயாரிக்கப்பட்டுள்ள இவை காய்கறி வடிவிலும் பூஞ்செடி வகைகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. 

பட்டாசு வடிவமைக்கப்பட்டுள்ள வேளாண் விதைகள் திங்கட்கிழமை முதல் மாதவரம் தோட்டக்கலை கல்லூரியிலும், செம்மொழி பூங்காவிலும் விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதர மாவட்டங்களில் தோட்டக்கலை அலுவலகங்களில் 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.