ரக்ஷா பந்தன் என்றால் என்ன?சகோதரிகள் சகோதரனுக்கு அன்று என்ன செய்ய வேண்டும் ?

ரக்ஷா பந்தன் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.


வட இந்தியாவில் மட்டுமே கோலாகலமாக கொண்டாடி வரப்பட்ட இந்த விழாவானது தற்போது தென்னிந்தியாவிலும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ரக்ஷாபந்தன் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இந்த தினத்தின் போது சகோதர சகோதரிகள் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பையும் பாசத்தையும் வெளிக்காட்டும் விதமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.  

சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட இந்த விழாவானது சொந்த அண்ணன் தங்கைகளுக்கு  இடையே மட்டும் ஏற்படாமல் யார் என்று தெரியாத ஒரு நபருக்கு கூட கயிறு கட்டி கொண்டாடும் விழாவாக உள்ளது.

இந்த ரக்ஷா பந்தன் தினத்தன்று ராக்கி என்று அழைக்கப்படும் ஒரு கயிறை ஒவ்வொரு தங்கையும் தங்களுடைய அண்ணன் களுக்கும் தம்பிகளுக்கும் அவர்களது கைகளில் கட்டிவிடுவார்கள்.

அவ்வாறு இவர்கள் கட்டிவிட்ட பின்பு அந்த அண்ணன்மார்களும் தம்பிமார்களும் தான் இந்த பெண்ணுக்கான பாதுகாப்பு பிணைப்பாக அமைந்திருக்க வேண்டும் என்பது வரலாற்று நியதி. 

இந்தியாவின் கலாசார பெருமையை எடுத்துக்கூறும் ஒரு சிறப்பான நாள் இந்த ரக்ஷா பந்தன். இந்த நாளில் தனக்கு தெரிந்தவர்களை மட்டுமல்ல, அறிமுகமே இல்லாத காவலர்கள், ராணுவ வீரர்கள் என எல்லோரையும் கூட சகோதர, சகோதரிகளாக எண்ணி ராக்கி கயிற்றைக் கட்டும் வழக்கமும் நமக்கு உண்டு. தற்போது இந்த விழாவானது வட இந்தியாவை தாண்டி தென்னிந்தியாவிலும் சகோதரத்துவத்தை பரப்பும் ஒரு விழாவாக அமைந்துள்ளது .