கேரளா மாநிலத்திலுள்ள மசூதியில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்ற சம்பவமானது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
இஸ்லாமியர்கள் மசூதிக்குள் நடந்த இந்து திருமணம்..! நெகிழ வைக்கும் காரணம்!

கேரளாவில் சேரவல்லி என்னும் இடத்தில் ஜமாத் மசூதி இயங்கி வருகிறது. இதே பகுதியில் பிந்து என்ற நடுத்தர வயது பெண், வசித்து வந்தார். இவருடைய கணவரின் பெயர் அசோகன். பல வருடங்களுக்கு முன்னர் அசோகன் இயற்கை எய்தினார். தம்பதியினருக்கு அஞ்சு என்ற மகளுள்ளார். கணவன் இறந்த காரணத்தினால் அஞ்சுவை வளர்ப்பதற்கு பிந்து மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இவர்களுடைய வீட்டுக்கு அருகே ஜமாத் சங்கத்தின் செயலாளரான நஜிமுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர்தான் அஞ்சுவின் முழு படிப்பு செலவையும் ஏற்றுக்கொண்டார். தற்போது திருமணத்திற்காகவும் பிந்து நஜாமுதீனிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது அவர் திருமணத்திற்கு நிறைய பணம் செலவாகும் என்பதற்காக, ஜமாத் சங்கத்தை அணுகுமாறு கூறியுள்ளார். அதன்படி பிந்துவும் செய்தார்.
ஜமாத் உறுப்பினர்கள் எந்தவிதமான வேறுபாடுமின்றி திருமணத்தில் செய்து தர ஒப்புக்கொண்டனர். ஒரு உறுப்பினர் முழுவதுமாக திருமண செலவை ஏற்றுக்கொண்டார். சென்ற வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்த பிறரிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் தங்களால் இயன்ற உதவிகளை மேற்கொண்டனர். திருமணத்திற்காக ஆயிரம் பேருக்கு சைவ உணவுகளையும் சமைத்திருந்தனர். திருமண பரிசாக அஞ்சுவுக்கு 10 சவரன் தங்க நகைகளும், 2 லட்சம் ரூபாயையும் வழங்கியுள்ளனர்.
இன்று காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை இந்து முறைப்படி இவர்களுடைய திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தினை கேரளா மாநிலத்தின் முதலமைச்சரான பினராய் விஜயன் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதாவது, "கேரளாவிலிருந்து ஒற்றுமை பெருகட்டும். மசூதி அதிகாரிகள், புதுமண தம்பதிகள், குடும்பங்கள் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மஞ்சுவின் கணவரின் பெயர் சரத் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் இந்தியா முழுவதிலும் வைரலாகி வருகிறது. சகோதரத்துவத்தை போற்றும் வகையில் இந்த நிகழ்வு நடந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.