திடீர் காய்ச்சல்..! 2 நாள் தீவிர சிகிச்சை..! ஆனாலும் மரணம் அடைந்த பெண் நீதிபதி! அதிர வைக்கும் காரணம்!

நீதிபதியாக பணியாற்றி வரும் பெண் டெங்கு ஜுரத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் கம்மம் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள சிவில் நீதிமன்றத்தில்  ஜெயம்மா என்ற பெண் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த வாரம் தொடக்கத்திலிருந்தே காய்ச்சல் இருந்து வந்துள்ளது. 19-ஆம் தேதியன்று அப்பகுதியிலுள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு ஜுரம் இருப்பதை உறுதி செய்தனர். 2 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 21-ஆம் தேதியன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தெலங்கானா மாநிலத்தில் முழுவதும் இதுவரை  டெங்கு காய்ச்சலால் 4,300 பேர் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவற்றில் 1,043 நபர்கள் ஹைதராபாத் பகுதியிலேயே வசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் மாநில அரசாங்கத்தினர் செப்டம்பர் மாதத்தில் யாரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை என்று கூறினர். மேலும், தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடமும் டெங்கு காய்ச்சலால் இறந்தவர்கள் பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியிட கூடாது என்று மாநில அரசாங்கம் கட்டுப்படுத்தி வருகிறது.

ஜெயம்மா தொடக்கத்தில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றி வந்துள்ளார். சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் கம்மம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார். இவருக்கு 2 மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கம்மம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள வழக்கறிஞர்கள் அஞ்சலி கூட்டத்தை நடத்தினர். இந்த சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.