பேசுன பணத்தை கொடுத்திட்டோம்..! இப்போ வரமாட்றாங்க..! ரூ.1 லட்சத்துடன் தலைமறைவான தமிழ் நடிகை!

படக்குழுவினரிடமிருந்து முன்பண தொகையை பெற்றுக்கொண்டு பிரபல நடிகை தலைமறைவாகியுள்ள சம்பவமானது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோலிவுட் திரையுலகில் "பட்டதாரி" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதிதி மேனன். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஓரளவுக்கு வெற்றி அடைந்ததை தொடர்ந்து, அட்டக்கத்தி படத்தின் ஹீரோவான தினேஷுடன் இணைந்து "களவாணி மாப்பிள்ளை" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதன்பிறகு இவருக்கும் நடிகர் அபி சரவணன் திருமணம் நடைபெற இருந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த திருமணமும் ரத்தானது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு தன்னுடைய பெயரை "மிர்னா மேனன்" என்று மாற்றிக்கொண்டார். பின்னர் ஒரேடியாக கேரளா மாநிலத்திற்கு சென்றுவிட்டார்.

சமீபத்தில் இவர் கேரளா சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து "பிக் பிரதர்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரை "கட்டம் போட்ட சட்டை" என்ற படத்தின் குழுவினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

இவருடைய திருமணம் ரத்தா வதற்கு முன்பு இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துகொண்டார் என்றும், முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் வாங்கினார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஒருவாரம் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

அதன் பின்னர் அவர் திடீரென்று மாயமானார். சமூக வலைதளங்களின் மூலமாக அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது எந்தவித பயனும் இல்லை என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். தற்போது அவர்கள் அடுத்தகட்டமாக அதிதி உறுப்பினராக இருக்கும் அனைத்து சங்கங்களிலும் புகார் கொடுக்க முடிவெடுத்துள்ளனர்.

இந்த சம்பவமானது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.