உலகப் கோப்பை! இந்தியா - நியுசிலாந்து போட்டி நடைபெற வாய்ப்பில்லை! ஏன் தெரியுமா?

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டி வருகிற விழாயன் அன்று ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்கவுள்ளது.


ஆனால் போட்டி நடைபெறவுள்ள பகுதியில் தீவிர மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் வானிலை அறிவிப்பின் படி, போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாளான புதன் கிழமை தீவிர மழை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பின்னர் மழை படிப்படியாக குறைந்து போட்டி நடைபெறவுள்ள விழாயன் அன்று மதியம் முற்றிலுமாக மழை இருக்காது எனவும் வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால்  இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டி தொடங்குவதில் தாமதம் ஆனாலும், ஓவர்கள் குறைக்கப்பட்டாவது போட்டி நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது. 

போட்டி நடைபெறவுள்ள விழாயன் அன்று அதிகபட்சமாக 13 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் எனவும், குறைந்தபட்சமாக 10 முதல் 11 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை அறிக்கையில்  கூறப்பட்டுளளது. இதனால் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.