மாதவிடாய் என்று கூறினாலும் விடாமல் கொடுமைப்படுத்தியதாக சின்மயானந்தாவால் சீரழிந்த பெண் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மூன்று நாட்களிலும் விடமாட்டார்! சாமியார் குறித்து சட்டக்கல்லூரி மாணவி வெளியிட்ட பகீர் தகவல்!
பாஜக தலைவர்களுள் மிகவும் முக்கியமானவர் சின்மயானந்த். இவர் பல கல்லூரிகளை நடத்தி வருகிறார். இவருடைய வயது 72. ஷாஜஹான்பூரிலுள்ள இவருடைய கல்லூரியில் பயிலும் மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி ஃபேஸ்புக்கில் சின்மயாநந்த் மீது புகார்களை பரப்பினார். அந்த பெண் மாயமாகிவிட்டார். இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவல்துறையினர் அந்த பெண்னை தேடி வந்தனர்.
தன்னுடைய நண்பருடன் அந்த பெண் ராஜஸ்தானில் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். காவல்துறையினர் தேடி அலைந்ததில் அந்த பெண்ணை கண்டு பிடித்தனர். உடனடியாக அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த பெண் கூறுகையில், " என்னை முதன்முதலில் சின்மயாநந்த் பாலியல் வன்கொடுமை செய்தபோது காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் காவல் என்னை கொன்று விடுவதாக மிரட்டினர். அதனால் ஃபேஸ்புக்கில் பதிவு செய்த உடனே நான் தலைமறைவாகி விட்டேன். மேலும் என்னுடைய விடுதி அறையை சீல் வைத்துள்ளனர்.
அதனை ஊடகத்தின் முன்னர் திறக்க வேண்டும். எனக்கு 200 முறைக்கு மேல் போன் செய்து அவருக்கு மசாஜ் செய்துவிடும்படி வற்புறுத்தினார். என்னை மட்டுமின்றி பல பெண்களின் வாழ்க்கையையும் சின்மயானந்த அழித்துவிட்டார். என்னை முதன் முதலில் அவருடைய அறைக்கு அழைத்து அருகில் அமர செய்தார். அதன் பின்னர்தன்னுடைய மொபைலில் நான் நிர்வாணமாக குளித்துக்கொண்டிருந்த வீடியோவை காண்பித்தார்.
வீடியோவை கண்டவுடன் அதிர்ச்சியில் அழுதுவிட்டேன். உடனடியாக அவர் வீடியோவை வெளியிடக்கூடாது என்று அவர் சொல்வது போல் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். நான் முதலில் மறுத்தேன். அப்போது அவர் என்னை தாக்கினார். தினமும் என்னை அழைத்து செல்வதற்காக அவருடைய பாதுகாவலர்கள் அனுப்பி வைப்பார்.
எனக்கு மாதவிடாய் என்று கூறினாலும் மனிதநேயமின்றி என்னை பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்குவார். ஆதாரங்களுடன் அவரை தண்டிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதனால்தான் கேமரா பொருந்திய மூக்கு கண்ணாடியை வாங்கி உபயோகிக்க தொடங்கினேன். அப்போது அவர் எனக்கு செய்த அனைத்துக் கொடுமைகளும் கேமராவில் பதிவாகியது. அதை தான் காவல்துறையினரிடம் சாட்சியாக சமர்ப்பித்துள்ளேன்" என்று கூறினார்.
சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு அந்த பெண்ணிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டனர். இந்த சம்பவமானது உத்தரபிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.