பாவம்னு நினைச்சி பரிதாபப்படமாட்டார்..! நடிகர் விஜயை நேரில் சந்தித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி உடைத்த உண்மை!

இளையதளபதி விஜய் மாற்றுத்திறனாளிகளை பரிதாபமாக பார்க்க மாட்டார் என்று ரசிகர் ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக நடிகர் விஜய் திகழ்ந்து வருகிறார். இவருக்கென்று தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சில வாரங்களுக்கு முன்னர் இது என் ரசிகர் ஒருவர் பேசிய வீடியோவானது வைரலானது. அதாவது, "கடந்த 20 ஆண்டுகளாக நடிகர் விஜய்யின் ரசிகர் நான். நான் உங்களை பல ஆண்டுகள் நேரில் காண்பதற்கு முயற்சி செய்து வருகிறேன். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. நீங்கள் இருக்கும்போதே ரசிகர்களாகிய நாங்கள் இறந்து விட வேண்டும். நீங்கள் இல்லாத உலகத்தில் எங்களால் வாழ இயலாது" என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்திருந்தார். இவருக்கு கண்பார்வை தெரியாதது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். எப்படியாவது இளைய தளபதி விஜய் இந்த ஒப்பற்ற ரசிகர்கள் பார்த்து விடவேண்டும் என்று அனைவரும் ஆசைப்பட்டனர். அந்த ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. 

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் விஜய் ரசிகரை பார்த்துள்ளார் என்று கூறப்படுகிறது. "விஜய் அண்ணா மாற்றுத்திறனாளிகளை பரிதாபமாக பார்க்க மாட்டார். நான் அவரைப் பார்க்க சென்ற போது கீழே தரையில் அமர்ந்து கொண்டேன். ஆனால் அவர் என்னை சோபாவில் அமர்ந்து கொள்ள கூறினார்.

நான் அதற்கு உங்களுக்கு சமமாக நாங்கள் இருக்கக்கூடாது என்று கூறினேன். அதற்கு அவர் இந்த உலகில் அனைவரும் சமம் என்று என்னை சோஃபாவில் அமர வைத்தார். மாற்றுத் திறனாளிகள் மீது விஜய் அண்ணா சிம்பதி காட்டமாட்டார். அவர்கள் மீது எம்பதி மட்டுமே காட்டுவார். அதுதான் அவரிடம் மிகவும் பிடித்தது" என்று அந்த ரசிகர் தான் இளைய தளபதி விஜய்யை சந்தித்த தருணத்தை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டார்.