நித்திக்கு எல்லாம் ரஞ்சிதா தான்! அவர் ஓரினச்சேர்க்கை பிரியர்! முன்னாள் சீடர் பகீர் தகவல்!

நித்யானந்தா ஓரினச்சேர்க்கையாளர் என்றும், தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தஞ்சாவூரை சேர்ந்த இளைஞர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தலைமறைவாகியுள்ள நித்தியானந்தா உலக அளவில் ட்ரெண்டிங்காகி வருகிறார். இவர் ஒரு தனி நாட்டை உருவாக்கியுள்ளது ஆகவும், அதற்கு கைலாசம் என்று பெயரிட்டு இருப்பதாகவும் கூறி வைரலானார்

அவர் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார். இதனிடையே நேற்று தஞ்சாவூரை சேர்ந்த இளைஞர் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று பரபரப்பான புகார் அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது: 

2009 ஆம் ஆண்டில் நான் என்னை நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இணைத்து கொண்டேன். எனக்கு திருவாரூர், நாகை, தஞ்சாவூர், ஆகிய இடங்களில் இயங்கிவந்த ஆசிரமங்களில் பொறுப்பு வழங்கப்பட்டது. எனது வற்புறுத்தலின் பேரில் ஆசிரமத்தில் கிட்டத்தட்ட 500 பேர் தங்களை இணைத்துக் கொண்டனர்.

யோகா, தியானம், இறை பக்தி, என்ற போர்வையில் நித்தியானந்தா மோசடி செய்வதை நாளடைவில் நான் தெளிவாக தெரிந்து கொண்டேன். அதன் பின்னர் 2015-ஆம் ஆண்டில் ஆசிரமத்திலிருந்து நான் வெளியேறினேன்.

நித்தியானந்தா செக்ஸ் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். என்னை போன்ற இளைஞர்களை வற்புறுத்தி அவர் பலமுறை உடலுறவு கொண்டுள்ளார். மாடல் அழகிகளை மயக்கி தன்னுடைய படுக்கை அறைக்கு அழைத்து வருமாறும் அவர் நிறைய முறை வற்புறுத்தியுள்ளார்.

நடிகை ரஞ்சிதாவின் கண்ணசைவில் தான் நித்யானந்தா செயல்பட்டு வருகிறார். மேலும் என்னுடைய 40 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் நிலங்களை நான் திருப்பி கேட்டபோது, எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆகையால் நான் இந்த புகார் மனுவை சமர்ப்பிக்கிறேன்.

இந்த சம்பவமானது நேற்று ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.