பர்ஸ்ட் நைட்டுக்கு முன்னாடி மனைவியின் கண்டிசன் எல்லாத்துக்கும் ஓகே சொன்ன கணவன்..! மேட்டர் ஓவரான பிறகு செய்த செயல்!

சொன்ன வாக்குறுதியை கணவர் காப்பற்றமாட்டேன் என கூறியதால் முதலிரவு முடிந்த கையோடு தாய் வீட்டிற்கு மனைவி சென்ற சம்பவம் அரியானா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.


அரியானா மாநிலம் மாலிக்பூர் காதர் என்ற பகுதியில் குல்ஃபாம் என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து முதலிரவு அன்று கணவனிடம் சில கோரிக்கைகளை மனைவி வைத்துள்ளார். அதாவது கணவரின் தாடி, மீசை, பைஜாமா உடை ஆகியவற்றை மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் வீடு நவீன வசதிகள் கொண்டதாக இல்லை என தான் விரும்பியபடி கட்ட வேண்டும் என கூறினார். இதை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த கணவர் எல்லாத்துக்கும் ஆமாம் சாமி என தலையாட்டினார். மேலும் குல்ஃபாமின் பொறுமையாக கேட்டுவிட்டு அதை நிறைவேற்றுவதாக வாக்கு கொடுத்துள்ளார்.

ஆனால் முதலிரவு முடிந்த பின்னர், தன்னுடைய விருப்பப்படியே இருப்பேன், எதையும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என மனைவியிடம் கூறிவிட்டு தூங்கச் சென்றுள்ளார் கணவர். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி முதலிரவு முடிந்த கையோடு காலையில் தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

காலையில் எழுந்து பார்த்த குல்ஃபாம் மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர்தான் மனைவி அவரின் பிறந்த வீட்டுக்கு சென்றது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து குல்ஃபாம் போலீஸில் புகார் அளித்துள்ளார்