பாகிஸ்தானை சேர்ந்த வாய் பேச முடியாத காது கேளாத சிறுமி ஒருவரை காமக் கொடூரர்கள் சிலர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவரின் நிர்வாண புகைப்படங்களை சிறுமியின் தாய்க்கு அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
என் மகளின் நிர்வாண போட்டோ வந்தது..! அவள் கதறியது போனில் கேட்டது..! கண்ணீருடன் பதறிய தாய்..! நடந்தது என்ன?

பாகிஸ்தான் நாட்டில் லாகூர் பகுதியில் ஷிப்லி நகர் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் கோமல் என்ற வாய் பேச முடியாத காது கேளாத சிறுமி தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கோமலின் தாயார் மற்றும் அவரது சகோதரி ஆகிய இருவரும் அழுதுகொண்டே புதிய வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். வீடியோ பதிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது அந்த வீடியோ பதிவில், கோமலின் தாயார் மற்றும் அவரது சகோதரி ஆகிய இருவரும் அழுது கொண்டே பேச ஆரம்பிக்கின்றனர். அதில் வாய் பேச முடியாத காது கேளாத சிறுமி கோமலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தி சென்றதோடு மட்டுமல்லாமல் அந்த சிறுமியை துடிதுடிக்க கற்பழித்துள்ளனர். அந்த சம்பவ இடத்திலிருந்து கோமல் தன்னுடைய தாயாருக்கு போன் செய்து அழுதிருக்கிறார். சிறுமியால் பேசவும் முடியாமல் காதும் கேட்க முடியாமல் இருப்பதால் கதறி அழுத சத்தம் மட்டும் அவரது தாயாருக்கு கேட்டுள்ளது.
அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், கோமலை கடத்தி சென்றது மட்டுமல்லாமல் நிர்வாண புகைப்படங்களை எடுத்து அதனை அவரது தாயாருக்கு அனுப்பியுள்ளதாக அவர் அந்த வீடியோ பதிவில் கூறி கதறி அழுதுள்ளார். இதுகுறித்து போலீசாரிடம் தகவல் அளித்தும் அவர்கள் முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார். மேலும் அவர்களுக்கு அலீம், பஷர், அசீம் ஆகிய மூவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளனர். இருப்பினும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் நேரடியாக சமூக வலைதளப் பக்கத்தில் மூலமாக தங்களுடைய மகளுக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளனர்.
இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த வீடியோ பதிவு பாகிஸ்தான் மனித உரிமை ஆணையத்தின் அமைச்சர் ஷிரின் மசாரியின் பார்வைக்கும். இதன் மூலம் அந்த குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பப்படுகிறது. ஊனமுற்ற அந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அந்த காமக் கொடூரர்களை சட்டம் தண்டிக்க வேண்டும் என பலரும் தங்களுடைய கண்டனங்களை கமெண்ட்டுகளாக பதிவு செய்து வருகின்றனர்.