குருபெயர்ச்சி 2019 - எந்தெந்த ராசிக்கு விபரீத ராஜயோகம்?

குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனது சொந்த வீடான தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார்.


வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது.

நிகழப்போகும் குருப்பெயர்ச்சியினால் ரிஷபம், கடகம், மகரம் ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோக காலமாகும்.

ரிஷபம்

ரிஷப லக்னத்திற்கு 8க்கு உரியவர் குரு. அவர் 8இல் இருந்தால் பெரிய யோகங்கள் கிடைக்கும். சுக்கிரன் உங்க ராசி அதிபதி அவர் அசுர குரு அவருக்கு எதிரிதான் குருபகவான் தேவ குரு. உங்க ராசிக்கு 8 மற்றும் 11ஆம் அதிபதி அவரே. அவர் ஆட்சி பெற்று அமரும் காலத்தில் பல நன்மைகள் ரிஷபத்திற்கு நடைபெறப்போகிறது. அஷ்டமாதிபதி அஷ்டம ஸ்தானத்தை அடைகிறார். ரிஷபத்தை விபரீத ராஜயோகம் கிடைக்கும். சனி கேது கூடவே இருந்தாலும் குரு பகவானால் நன்மைகள் நடைபெறும்.

கடகம்

கடகம் ராசிக்காரர்களே ஆறுக்குடைய குரு ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் உங்களுக்க விபரீத ராஜயோகம் வந்திருக்கிறது. ஆறாம் இடம் போட்டி பந்தையம், எதிர்ப்பு நோய், கடன் ஸ்தானம், கடன்கள் அடைபட வருமானம் வரும் பொருட்கள் வாங்குவீர்கள். குருவின் பார்வை இம்முறை உங்க ராசிக்கு 10, 12வது வீடுகளின் மீது விழுகிறது. 10வது வீட்டின் மீது குரு பார்வை படுவதால் போட்டி தேர்வில் வெற்றி பெறுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் மாற்றம் முன்னேற்றம் ஏற்படும். 12வது வீட்டின் மீது குரு பார்வை விழுவதால் வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். இது வரை படித்து வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

மகரம்

கெட்டவன் கெட்டிடில் கிட்டிடடும் ராஜ ஜோகம் என்ற விதியில் யோகத்தை செய்யும். நன்மை செய்யாத கிரகம் மறைந்தால் நன்மையை அதிகமாக எதிர்பார்க்கலாம். 12ஆம் வீட்டில் அயன ஸ்தயனத்தில் அமர்ந்த ராசி அதிபதி சனி அமர்ந்து முடக்கிப் போட்டார். இனி குரு அங்கு வருவதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்ட தீமைகளை குறைப்பார். தூர தேச பயணங்கள் அமையும்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு பாக்யாதிபதி பாக்ய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். அவரின் பார்வையும் உங்க ராசியின் மேல் விழுவதால் குருவின் பரிபூரண ஆசி கிடைக்கப்போகிறது. மேஷம் ராசிக்காரர்களுக்கு இது வரப்பிரசாதம். யோகம் கிடைக்கும். செல்வம் செல்வாக்கு சேரும். உங்கள் ராசியையும் ராசிக்கு மூன்று மற்றும் ஐந்தாம் வீட்டையும் பார்ப்பதால் இது ராஜயோக காலமாக அமையப்போகிறது. பாக்ய குருவினால் அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பு அரவணைப்பு கிடைக்கும். புதிய வேலை, தொழில் வளர்ச்சி, புரமோசன் கிடைக்கும். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆளுமை புகழ் கீர்த்தி கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். என்ன தொழில் செய்தாலும் அது வெற்றிதான். தொட்டது துலங்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு ஆறாம் இடத்து குருவினால் பல அல்லல்கள் ஏற்பட்டது. இப்போது களத்திர ஸ்தானத்தில் அமரப்போகும் குருவினால் பல அற்புதங்கள் நிகழப்போகிறது. மிதுன ராசிக்காரர்களுக்கு குரு கெடுதல் செய்ய மாட்டார் நன்மைதான் செய்வார். கேதுவை நோக்கி குரு நெருங்குவதால் வீடு, அலுவலகத்தில் நன்மைகள் நடைபெறும். சூழ்நிலைகள் மாறப்போகிறது. ஏழாம் வீட்டில் சனி கேது கிரகங்களினால் தினந்தோறும் சண்டைதான். குரு ஏழாம் வீட்டிற்கு வந்து சனியும் கேதுவும் இணையப்போகும் காலம் இதுவாகும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கப்போகிறது.

சிம்மம்

சிம்மராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டம். எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும். சிம்மராசிக்காரர்கள் வெளிநாடு செல்லும் யோகம் வந்து விட்டது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே உங்க ராசிக்கு பத்தாம் வீட்டை குரு பார்ப்பதால் உத்யோகத்தில் பதவி உயர்வினால் முன்னேற்றம் ஏற்படும். வேலையே இல்லையே என்று நினைத்தவர்களுக்கு புது வேலை கிடைக்கும், சிலருக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும்,

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே குரு பகவான் தனது ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10 ஆம் வீட்டினை பார்வையிடுகிறார். புதிய வேலை கிடைக்கும். இதுநாள் வரை திருப்தியில்லாமல் வேறு வேலை செய்தவர்கள் இனிமேல் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். கை நிறைய சம்பளமும் வரும். சிலர் வேலைக்காக வெளிநாட்டு பயணமும் செல்வீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே ஜென்ம குரு உங்களுக்கு நன்மைகளைத் தருவார். வேலையில் பலருக்கு பிரச்சினை ஏற்பட்டது. இனி குரு பகவான் ஓயாமல் உழைக்க வைப்பார். உழைக்க தயங்காதீர்கள். நல்ல வேலை கிடைக்கும். ஊதிய உயர்வுடன் புதிய வேலை கிடைக்கும். இதுநாள் வேலைகளில் வேலை செய்யும் இடங்களில் இருந்த இருந்த பிரச்சினைகள் தீரும். பதவிகளும் பட்டங்களும் தானாக தேடி வரும்.

கும்பம்

குரு தனுசு வீட்டிற்கு வருவதால் வேலையில் உள்ள பிரச்சினைகள் தீரும். புரமோசன் கிடைக்கும். அரசாங்க வேலை, போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். நல்ல வேலைக்கு முயற்ச்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை ஊதிய உயர்வு தலைமை பொறுப்பு தேடி வரலாம். பிள்ளைகள் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து குருபகவான். உங்கள் ஏழாம் வீட்டையும் பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும்.