அத்திவரதரை தரிசிக்கச் செல்லும் பக்தர்களே... இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டுப் போங்க

தினமும் காலையில் 7 மணிக்கு மதுரையிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் இரயில் புறப்படுகிறது செங்கல்பட்டுக்கு மதியம் 1:30 போய் சேரும். கட்டணம் ₹160


செங்கல்பட்டில் இறங்கி செங்கல்பட்டு டூ காஞ்சிபுரம் பஸ்ஸில் ஒரு மணி நேரத்தில் காஞ்சிபுரத்தை அடையாளம் பஸ் கட்டணம் 30 ரூபாய்

காஞ்சிபுரத்தில் பகல் உணவை முடித்துக்கொண்டு நேராக காஞ்சி ஸ்ரீ காமாட்சியை 3:30 முதல் 4:30 க்குள் தரிசனத்தை முடித்துக்கொண்டு அடுத்த அதன் அருகில் உள்ள உலகளந்த பெருமாள் தரிசனம் செய்துகொண்டு அதன்பின் காஞ்சி மடம் சென்று பெரியவா சந்திரசேகர சுவாமிகள் தரிசனம் செய்து பின்பு அங்கிருந்து பத்து ரூபாயில் அரசின் சுமால் பஸ்சும் ஷேர் ஆட்டோக்களும் காஞ்சி வரதர் கோயில் மேற்கு கோபுரத்தை அடையும்

கிட்டத்தட்ட மாலை 7 மணிக்கு மேல் அத்திவரதரை தரிசிக்கச் சென்றால் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் தரிசனத்தை முடித்துவிட்டு இரவு செங்கல்பட்டில் 11:30  மணிக்கு உள்ள அந்தோ தயா எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி கட்டணம் 190 மதுரைக்கு காலையில் பத்து மணிக்குள் வந்து சேர்ந்துவிடலாம்