சிக்கன் மசாலா என நினைத்து பூச்சி மருந்தை வைத்து கோழி குழம்பு..! பாட்டியின் செயலால் விடுமுறைக்கு வந்த பேரன்களுக்கு நேர்ந்த பயங்கரம்!

விடுமுறைக்கு வந்த பேரன்களுக்கு சமைத்து கொடுக்கும் ஆர்வத்தில் பாட்டி தவறுதலாக பூச்சி மருந்தை கலந்து கொடுத்த சம்பவமானது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்டம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட செறுலோபள்ளி என்ற கிராமத்தில் தனம்மா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா, ரோஹித் என 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரையும் விடுமுறை காலத்தில் தன்னுடைய அம்மாவின் வீட்டிற்கு தனம்மா அனுப்பி வைத்துள்ளார்.

பேரன்கள் வீட்டிற்கு வருகிறார்கள் என்பதை கேள்விப்பட்டதில் இருந்து பாட்டி கோவிந்தம்மா மகிழ்ச்சியை தள்ளாடினார். பேரன்கள் வந்தவுடன் அவர்களுக்கு சிக்கன் சமைத்து தரவேண்டுமென்று ஆயத்தமானார். அதன்படி சிக்கன் மசாலாவை உபயோகித்து சமைப்பதற்கு பதிலாக, பூச்சி மருந்தை குழம்பில் தவறுதலாக கலந்துள்ளார். 

அதை சாப்பிட்டவுடன் 3 பேரும் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே 3 பேரும் மயங்கி விழுந்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் நெடுநேரமாக 3 பேரையும் வெளியே காணாததால் வீட்டிற்குள் நுழைந்து பார்த்தனர். அப்போது மூவரும் மயங்கி விழுந்து நிலையில் கிடந்தது கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 

உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு 3 பேரையும் அழைத்து சென்றனர். துரதிர்ஷ்டவசமாக செல்லும் வழியிலேயே ஜீவா மற்றும் ரோகித் உயிரிழந்துள்ளனர். முதியவர் கோவிந்தம்மாள் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார். சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறைக்கு வந்த சிறுவர்கள் உயிரிழந்த சம்பவமானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.