இருசக்கர வாகனம் தொடர்பாக அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற வீடியோவானது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
300ரூபா கொடுத்தா தான் பேப்பர் நகரும்! ஏழைப் பெண்ணை கதற விட்ட அரசு அதிகாரி! வைரல் வீடியோ!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி அமைந்துள்ளது. இதற்கு அருகே அமைந்துள்ள கேழல் என்னும் கிராமத்தில் ராஜலட்சுமி என்பவர் வசித்துவருகிறார். தமிழக அரசின் அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்தின் கீழ் இவருக்கு 25,000 ரூபாய் மானியம் கிடைக்கவுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை இவர் பூர்த்தி செய்து இந்தத் திட்டத்தின் முதல்நிலை ஆய்வாளரான மாரிமுத்துவிடம் இதனை வழங்கியுள்ளார்.
ஆனால் மாரிமுத்து விண்ணப்பத்தை பெறுவதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு 150 ரூபாயும், தனிப்பட்ட முறையில் ரூபா 150 என மொத்தம் 300 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் இந்த விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.
மாரிமுத்து தன்னுடைய சகோதரரிடம் அந்த விண்ணப்பத்தை கொடுத்து அனுப்பியுள்ளார். அப்போதும் அவர் அதே பதிலையே கூறியுள்ளார். உடனடியாக ராஜலட்சுமியின் சகோதரர் தன்னுடைய பாக்கெட்டில் கேமராவை ஆன் செய்துவிட்டு லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார்.
அவர் லஞ்சம் வாங்கும் வீடியோவானது எடுக்கப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடனடியாக மாவட்ட ஆட்சியர், மாரிமுத்துவை விசாரிக்ககோரி உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவமானது ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.