கொட்டிய பண உதவி..! தற்போது அரசு வேலை..! சுர்ஜித் தாயாருக்கு அடுத்த ஆதரவுக் கரம்!

ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த 2 வயது குழந்தையான சுர்ஜித்தின் தாயாருக்கு அரசு வேலை கிடைக்கப் போவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


கடந்த சில வாரத்திற்கு முன்பு தமிழகம் முழுவதும் பேசும் பொருளாக இருந்தது 2 வயது குழந்தை சுர்ஜித். அவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிக்கி கொண்ட சம்பவம் தமிழ்நாட்டு மக்களை உலுக்கியது. அரசாங்கம் எவ்வளவோ முயன்றும், 80 மணி நேர நீண்ட போராட்டத்திற்கு பிறகு சுர்ஜித் உடல் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான். இந்த சம்பவமானது தமிழகத்தை உலுக்கியது. இந்த விவகாரத்திற்கு பிறகு நிறைய ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் திருச்சி மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்தபோது, "தமிழகத்தின் அனைத்து ஆழ்த்துளை கிணறுகளும் மூடப்பட்டு வருகின்றன. மேலும் 12-வது வகுப்பு வரை படித்துள்ள சுர்ஜித்தின் தாயாரான கலாமேரிக்கு ஏற்ற அரசு வேலையை தருவதற்கு தமிழக அரசு பரிசீலித்து வருகிறது" என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியானது சுர்ஜித்தின் குடும்பத்தினருக்கு சற்று மனநிறைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.