கல்லூரி மாணவர்கள் மீது மோதிய அரசு பேருந்து..! சம்பவ இடத்திலேயே இருவரும் பலி! ஸ்ரீவி சோகம்!

இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவமானது விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.


விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் எனுமிடம் அமைந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் மணிகண்டன் மற்றும் மகாராஜன் எனும் இளைஞர்கள் வசித்து வந்தனர். இருவரும் அதே பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தனர்.

கல்லூரி முடிந்த பிறகு இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணன் கோவில் பகுதிக்கு அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த பேருந்து அதிவேகமாக வந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. மோதிய அதிர்ச்சியில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

சம்பவம் அறிந்து விரைந்து வந்த கிருஷ்ணன் கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  2 இளைஞர்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விபத்தானது ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.