சாலையில் தாறுமாறாக ஓடிய பஸ்! நேராக கடைகளுக்குள் புகுந்த விபரீதம்! நாகர்கோவில் பரபரப்பு!

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து கடைக்குள் புகுந்ததில் 4 பேர் காயமடைந்து சம்பவமானது நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.


கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று அதிகாலை நாகர்கோவிலுக்கு ஒரு அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தை குழித்துறை பகுதியை சேர்ந்த ரசல்ராஜ் என்ற 45 வயது நபர் ஓட்டி சென்றுள்ளார். மணலில் மறுக்கவில்லை பகுதியை சேர்ந்த தவசி என்பவர் மணலில் மருகவிளை பகுதியை சேர்ந்த தவசி என்பவர் நடத்துநராக பணியாற்றினார்.

பார்வதிப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து பேருந்து விலகி சென்றுள்ளது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கூச்சலிட்டனர். அதன்பின்னர் பாலத்தின் மீது பேருந்து நேரடியாக மோதியுள்ளது. அப்போது ரசல்ராஜ் வலது புறமாக பேருந்தை இயக்கியுள்ளார். 

திடீரென்று பேருந்து சாலையோரத்திலிருந்த கடையில் மோதியுள்ளது. இந்த விபத்தில் கடையின் முன்புறம் முற்றிலும் சேதமடைந்தது. பேருந்தின் முன்புறமும் பலமாக சேதமடைந்தது. இந்த விபத்தில் ரசல்ராஜ், தவசி உட்பட பலசேவம் மற்றும் சசி ஆகிய பயணிகளும் காயமடைந்தனர். 

உடனடியாக அக்கம்பக்கத்தினர் காயமடைந்தோரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது நாகர்கோவில் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.