இந்தியாவை ஒரே நாளில் பணக்கார நாடாக்கும் கண்டுபிடிப்பு! பூமிக்கு அடியில் புதைந்து கிடக்கும் 3350 டன் தங்கம்..! எந்த மாநிலத்தில் தெரியுமா?

உத்திரபிரதேசத்தில் புதிதாக 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தியானது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரபிரதேச மாநிலத்தின் 2-வது பெரிய மாவட்டமாக சோன்பத்ரா என்ற மாவட்டம் கருதப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் சில இடங்களில் தங்க சுரங்கங்கள் அமைந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன.

இதனை உறுதி செய்து கொள்வதற்காக, இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் உத்திரபிரதேச ஆய்வு மையம் இந்த மாவட்டத்தில் சில குறிப்பிடத்தக்க இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அதன்படி சோன்பத்ராவில், சோனபாஹதி என்ற இடத்தில் 2700 டண் மதிப்புள்ள தங்க படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹார்டி என்ற இடத்தில் 650 டண் மதிப்புள்ள தங்க படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்தியாவிடம் தற்போது 626 டண் தங்க நகைகள் கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவிடம் 8,133 டண் தங்க நகைகளும், ஜெர்மனியிடம் 3,566 டண் தங்க நகைகளும் கையிருப்பாக உள்ளது. இந்த சுரங்கங்கள் பயன்பாட்டிற்கு வந்தால் இந்தியாவின் தங்க உற்பத்தி கிட்டத்தட்ட 5 மடங்கு உயரும் என்று கூறப்படுகிறது. 

உலகின் நாணயம் தயாரிக்கும் அமைப்பான ஐ.எம்.எஃப் நிறுவனத்திடம் 2,136 டண் தங்க நகைகள் உள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆய்வாளர்கள் தங்களுடைய ஆய்வறிக்கையை அரசாங்கத்திடம் ஒப்படைத்த பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 

இந்த செய்தி உத்திரபிரதேச மாநில மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.